மிதுன ராசிக்கு இந்த வாரத்தில் வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்.. ஒரு விஷயம் மட்டும் கவனம்
வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல்14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும் வாரம். உத்யோகம், தொழில், வீடு, கல்வி எல்லாவற்றிலும் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நல்ல செய்திகள் வரும். திடீர் அதிர்ஷ்டத்தால் திக்கு முக்காடுவீர்கள். பொருளாதாரம் உயர்ந்து வாழ்க்கையில் சிறப்பாக ஏற்றத்தை காண்பீர்கள்.
உத்யோகம் அங்கீகாரம்
உத்யோகத்தில் இதுநாள் வரை நிலவி வந்த சிக்கல்கள் விலகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். தொழிலில் இருந்து வரும் சிக்கல்களும் நிவர்த்தியாகும். தொழிலில் நீண்ட காலமாக செயல்படுத்த நினைக்கும் காரியங்களை இப்போது செயல்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
வெளிநாடு சுப காரியங்கள்
குடும்பத்தில் இருந்த வந்த இறுக்கமான நிலை மாறி மகிழ்ச்சி பிறக்கும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம், குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. குழந்தைகளால் பெருமிதம் கொள்வீர்கள்.
பயணங்கள் அணுகூலம்
பயணங்கள் அதிகம் இருக்கும். பயணங்களால் ஆதாயமும் உண்டு. பண வரவு சிறப்பாக இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். சகோதர உறவில் இருந்த பகை நீங்கி பாசம் அதிகரிக்கும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடவுளின் அணுகூலம் பரி பூரணமாக உள்ளது.
கவனம்
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை, சளி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. கோபத்தை குறைத்து எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம் இது. வியாழக்கிழமை நாளில் உங்கள் வீட்டின் அருகே உள்ள அம்மன் கோயில் சென்று வழிபடுவது நன்மையை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications