ஜாவா சுந்தரேசனாக மாறும் மகரம்.. இன்கிரீமென்ட், புரோமோஷன், பணம்.. எல்லாமே கிடைக்கப் போகுது

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Weekly rasi palan Magaram Lucky zodiac signs

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகர ராசி பலன்

மகர ராசிக்காரர்கள் யோக பலன்கள் அதிகளவில் பெறப் போகிறீர்கள். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அதன் மூலம் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பெருகும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை ஏற்படும். சிவன், பார்வதி இருக்கக்கூடிய கோயில்களில் வழிபாடு செய்வது அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.

ஆரோக்கியம்

காது, மூக்கு, தொண்டை, பற்கள், கழுத்துப் பகுதியில் சிறு பிரச்சனைகள் வந்தாலும் கவனமாக இருப்பது நல்லது. வாகனம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த ஆனி மாதம் முழுவதும் நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கும் காலகட்டமாக இருக்கும். எதிரிகள் விஷயத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

பிரச்சனை தீரும்

வழக்குகளில் வெற்றி உண்டாகும். சோம்பல் அமைப்பு தீரும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

திடீர் ஏற்றம்

செல்வாக்கு உயரும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இடமாற்றத்தில் இருந்து வந்த பாதிப்புகள் சரியாகும். முதலீடுகளுக்குப் பஞ்சம் இருக்காது. அனுகூலம், சந்தோஷம், நிம்மதியைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் திடீர் ஏற்றத்தைப் பெறும் காலகட்டமாக இருக்கும்.

வெற்றி மேல் வெற்றி வரும்

உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழில் தொடர்பான அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக முடியும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறம் அமைப்பு உண்டாகும். சோம்பலை விட்டுவிட்டு உற்சாகமாக செயல்படும் காலகட்டமாக இருக்கும். தேவையில்லாத குழப்பம், மன பாரம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மாற்றமும், முன்னேற்றமும் தரும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+