மீன ராசிக்கு அற்புதமான மாற்றம்.. சகலவித அதிர்ஷ்டங்களும் உங்களுக்குதான்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையில் தெய்வ வழிபாடுகள் மிக மிக முக்கியமானதாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய அமைப்பு உள்ளது. ரத்த பந்த உறவுகளின் தேக ஆரோக்கியம், குடும்பத்தில் ரத்தத்தில் இருக்கக்கூடிய நோய் பிரச்சனைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு போன்ற பரம்பரையாக இருக்கும் நோய் பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அலர்ஜி, ஒவ்வாமையால் தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படும்.
முன்னேற்றம்
குடும்பத்தில் பெரிய சந்தோஷங்கள் ஏற்படும். நரசிம்மர் காயத்ரியை கேட்பது, சொல்வது, நரசிம்மர் வழிபாடு, நரசிம்மர் கவசம் அற்புதத்தை ஏற்படுத்தும். துணையின் தேக ஆரோக்கியத்தை மிக கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம், வியாபார மாற்றம் நல்ல முன்னேற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டம்
எடுத்த காரியத்தில் ஜெயம், தைரியம் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், சமுதாயத்திலும் காப்பாற்றக் கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடக் கூடிய அதி அற்புதம் உண்டாகும். புதிய முயற்சிகள் டக்கென்று ஏற்படும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், விளையாட்டுத் துறையினருக்கு நினைத்த காரியங்கள் எல்லாம் நடக்கும் அற்புதமும், ஆனந்தமும், மிகப்பெரிய நம்பிக்கையையும் உண்டாக்கும்.
பயணங்கள் நல்லது
கோளார் பதிகத்தை சொல்லி வந்தால் தடைகள் தவிடுபொடியாவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். ஏழரை சனி இருப்பதால் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் பெரிய பாதிப்புகள் ஏற்படும். ரத்த பந்தங்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. உள்ளூர், வெளியூர், கடல் சார்ந்த பயணங்கள் என எந்தப் பயணங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. அதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல ஏற்றமும், வளர்ச்சியும் உண்டாகும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications