மிதுனம், கடக ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. தடைகளை தகர்த்தெறியும் சூப்பரான காலகட்டம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஏப்ரல் 28 முதல் மே 4 ஆம் தேதி மிதுனம், கடக ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-mithunam-kadagam-gemini-cancer-people-will-get-in-april

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் விநாயகரை முதலில் வழிபடடுவிட்டு முருகர் அல்லது துர்க்கையை வழிபடுவது எல்லா விஷயங்களிலும் பெரிய நம்பிக்கை, சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, குறைந்த ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் பரவும் தொற்று நோய் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தி தரும்.

தாய் வழி, தந்தை வழி உறவுகளின் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ரத்த பந்தத்தில் சுபகாரியத் தடைகளில் நிவர்த்தி ஏற்படும். நீண்டநாட்களாக தேக ஆரோக்கியத்தில் உபத்திரவம் கொடுத்துக் கொண்டிருந்த பிரச்சனை தீரக்கூடிய அமைப்பு உண்டாகும். தொடர்ச்சியாக இருந்த மனத் தாங்கல் படிப்படியாகத் தீரும்.

உத்தியோகத்தில் சந்தோஷம், அனுகூலம் நம்பிக்கை ஏற்படும். தொடர்ச்சியாக இருந்த தடைகள் தவிடு பொடியாகக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம், படிப்பு ஏற்றம் என்று ஏற்றத்துக்கு உண்டான காலகட்டமாக இருக்கும். வார்த்தைகளில் மதிப்பு, மரியாதை ஏற்படக்கூடிய சுபிக்ஷம், நம்பிக்கை நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் போன்ற மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிதுன ராசிக்காரர்கள் முயற்சித்தால் வெற்றிகளை ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் அலட்சியப்படுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் வயிறு சம்பந்தப்பட்ட, ஜீரண உறுப்புகள் சம்பந்தப்பட்ட சிறு விஷயங்களிலும் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் பெரும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதாக இருக்கும். யோகமும், அனுகூலமும் பெரியளவு நம்பிக்கையை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம். கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக ஆக்கப்பூர்வமான சந்தோஷங்கள் நிச்சயமாக ஏற்படும்.

கடக ராசியினருக்கு புதிய முயற்சிகள் அனுகூலத்தை தரும். இழந்த பதவி, இழந்த பெயர், இழந்த புகழை நிச்சயமாகப் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். எதிலெல்லாம் மன வருத்தத்தில் இருக்கிறீர்களோ அதைவிட பெரிய மடங்கு புகழையும், பெயரையும் இந்த வாரத்தில் இருந்து பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். உள்ளூர், வெளியூர், தொலைதூரம், கடல் கடந்த பயணம் மேற்கொள்ளக்கூடிய அமைப்பு ஏற்படும்.

மாணவர்களுக்கு படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை, தொழில் தடை, லேப் அசைன்மெண்ட் கைகொடுக்கும். ஆசிரியப் பெருமக்கள் உங்களை கொண்டாடும் காலகட்டமாக இருக்கும். வாராஹி, காளி, சூழினி வழிபாடுகள் நம்பிக்கையான சூழ்நிலை, சந்தோஷத்தை ஏற்படுத்தி தரும். கடக ராசிக்காரர்கள் வாகன அமைப்பில் மாற்றங்கள், மனதில் தெளிவும், சந்தோஷமும் ஏற்படும்.

படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு பெரிய கெளரவம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய உன்னதமான சூழ்நிலை ஏற்படும். உச்சம்பெற்ற சூரியனால் பண வரவில் இருந்த தடைகள் தவிடு பொடியாகும். அசையும், அசையா பொருள் சேர்க்கை, புதிய கூட்டணி, புதிய கூட்டாளிகள் கிடைப்பது ஆனந்தத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+