மிதுனம், கடகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும்.. வாயில தான் கண்டம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: வைகாசி 19 முதல் 25 ஆம் தேதி வரை, ஜூன் 2 முதல் ஜூன் 8 ஆம் தேதி வரை மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Weekly rasi palan Lucky zodiac signs

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோகம் மாற்றம் காணப்படும். வியாழக்கிழமை தோறும் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய குருவை, மகான்களை தரிசனம் செய்வது அற்புதமான பலன்களைத் தரும். பெரிய அளவில் அனுகூலம் ஏற்படும். துணையின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பெற்றோர் விஷயத்தில் ஏற்றம் பெறக்கூடிய ராசிகள்.

அலர்ஜி, ஒவ்வாமை, விட்டமின் டி குறைபாடு, கேல்சியம் குறைபாடு, பல்லில் தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெற்றோர், பெரியோர் தேக ஆரோக்கியத்தை அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். சுப காரியங்களை தள்ளிப் போடாமல் செய்து கொள்வது நல்லது. தொழில், உத்தியோகம், வேலை, வண்டி, வாகனம் என எந்தவித மாற்றம் வந்தாலும் ஏற்றுக் கொள்வது நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும்.

கிரகத்திற்கு ஏற்றவாறு நல்ல பொறுப்பு, பதவி, பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு வந்தால் அதனை ஏற்றுக் கொள்வது அற்புதமான மாற்றத்தை தரும். முதலில் சிறு கஷ்டமாக இருந்தாலும் பின்னாளில் அற்புதப் பலன்களைப் பெறுவீர்கள். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை நிவர்த்தி செய்வீர்கள். ஆச்சரியமான முன்னேற்றம், அனுகூலமான அமைப்பு, மிகப்பெரிய முன்னேற்றம், மிகப்பெரிய நம்பிக்கை, சந்தோஷம் ஏற்படக் கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் யோக பலத்தை அதிக அளவில் பெறப் போகின்றீர்கள். நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு தீபம் ஏற்றுவது விசேஷமான பலனைத் தரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக் கூடிய அமைப்பு ஏற்படும். அடிவயிறு, லிவர், கிட்னி தொடர்பான விஷயங்களில் சிறு பிரச்சனை வந்தாலும் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

பிள்ளைகளிடம் பூதக் கண்ணாடி ஆராய்ச்சியை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் வாக்குவாதம் செய்தால் தேவையில்லாத குழப்பமும், சங்கடமும் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக சிறு குழப்பங்கள் காணப்படக்கூடிய அமைப்பு உள்ளது. பொறுமையாக இருந்தால் மிகப்பெரிய வெற்றியும், அனுகூலமும் பெறும் வாய்ப்புள்ளது. வாகனங்களில் வித்தைகளைத் தவிர்ப்பது நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் பேச்சில் மிகுந்த கவனம் தேவை. 8 ஆம் இடத்தில் ராகு இருந்தாலும் குரு பார்வை 8 இல் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பயணங்கள் வந்தால் எடுத்துக் கொள்வது நல்லது. வேற்று மொழி மனிதர்கள் வந்தால் அதிக ஆதாயம் ஏற்படும். இளம் வயதைச் சேர்ந்த கடக ராசிக்காரர்களுக்கு படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை, தொழில் தடை நீங்குவதை கண்கூடாகப் பார்க்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மிகப்பெரிய நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கைகொடுக்கும். இழுபறியாக இருந்த நிலைமை எல்லாம் படிப்படியாக மாறும். தொடர்ச்சியாக இருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எடுத்த காரியங்களில ஜெயம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+