வார பலன்: ரிஷப ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் யோகம்.. வார்த்தைகளில் மிகுந்த கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-rishabam-taurus-people-will-get-in-june-16th-to-22-in-the

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வாக்குகள் கூடக் கூடிய காலகட்டமாக இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் தெய்வ வழிபாடு செய்வது நல்லது. பெருமாள், அம்மன் வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.

பேச்சில் கவனம்

வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்து வந்த அனைத்து பணிகளையும் செய்து முடிக்கும் காலகட்டமாக இருக்கும். வண்டி, வாகனங்கள் அனுகூலத்தை தரும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணம் என எந்த பயணங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது. அடுத்தடுத்து பயணங்களை ஏற்படுத்திக் கொள்வது ஏற்றத்தை தரும்.

கடன் தீரும்

வெளியிடத்திலும் சரி, நண்பர்களிடத்திலும் சரி கோபதாபமில்லாமல் பார்த்துக் கொள்வது பதற்றத்தைக் குறைக்கும். பழைய கடன்களை பைசல் செய்து முடிக்கும் உங்கள் முயற்சி வெற்றியைத் தரும். அஷ்டமத்தில் இருக்கும் சிக்கல்களை படிப்படியாக தீர்த்துக் கொள்வது நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில் சார்ந்த முன்னேற்றம் யோகமும், அனுகூலத்தையும் தரும்.

யோகம்

மேலதிகாரிகளுக்கும், உங்களுக்கும் இருந்த இடைவெளிகள் குறையும். புதிய தொழில்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு புதிய தொழில் கிடைக்கும். புதிய படிப்பு, புதிய உத்தியோகம், புதிய வியாபாரம் உண்டாவதற்கான அனுகூலமும், அபரிமிதமான சந்தோஷம் ஏற்படும் வாய்ப்புள்ளது. திட்டமிட்டு செய்யும் அனைத்து காரியங்களும் சந்தோஷமான சூழ்நிலையை ஏற்படுத்தும் காலகட்டமாக இருக்கும்.

அதிர்ஷ்டம்

யார் என்ன சொன்னாலும் தர்க்கங்களை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அற்புதமான காலகட்டமாக இருக்கும். எந்தவிதமான ரிஸ்க்குகளையும் இந்த காலகட்டத்தில் எடுக்கலாம். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து விஷயங்களும் பெரிய அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் ஏற்படுத்தும்.

ஏற்றம்

11 ஆம் இடத்தில் சனி இருப்பதால் சிறு சிறு தடைகள், தொந்தரவுகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் நிவர்த்தி ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். கடன்களை அடைக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். தாய் வழி, தந்தை வழி, ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்க்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+