விருச்சிக ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. மாற்றங்களால் ஏற்பட போகும் முன்னேற்றம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல்20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-scorpio-viruchigam-people-will-get-from-july-14th-to-20th

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வீண் பழியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் சகவாசத்தை கைவிட வேண்டும். சனியின் பார்வை சுக்கிரனின் மேல் இருப்பதாலும், ராசியை பார்ப்பதாலும் கவனமாக இருப்பது நல்லது. திரிகோணத்தில் சனி, புதனின் இணைவு 17 ஆம் தேதி வரை இருக்கிறது. அற்புதமான காலகட்டமாக இருக்கும். அதன் பிறகு சூரியனும் இணைவதால் கால், முட்டி, முதுகு வலி, தொடையில் பாதிப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தாய் விஷயத்தில் கவனம்

பயணங்களுக்கான டிக்கெட் போடும் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. 3 ஆம் இடத்தில் சந்திரன், திரிகோணத்தில் சுக்கிரன், 4 ஆம் இடத்தில் சந்திரன், ராகு இருப்பதால் தாய் மற்றும் தாய் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. வீடு மாற்றம், இடமாற்றம், நில மாற்றம் நடப்பதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. மற்ற அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். புதிய அறிமுகங்களிடம் கவனம் தேவை. மேலதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

வழிபாடு

வெள்ளிக்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது நல்லது. வயிறு, மனஅழுத்தம், அசிடிட்டி தொடர்பான விஷயங்களில் கவனம். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அருகில் இருக்கும் வீட்டாரிடம் வாக்குவாதங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் எல்லாம் மாறும். சங்கடங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

தொட்டது ஜெயம்

மன சோர்வை தவிர்க்க மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வேண்டாதவற்றை எண்ணி மனம் சோர்வடைவதைத் தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+