சிம்மத்துக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருதே.. கொட்டும் பணம்.. கொஞ்சம் கவனமும் அவசியம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமைகளில் தெய்வ வழிபாடு செய்வது நன்மை பயக்கும். தேக ஆரோக்கியத்திலும், பண விஷயத்திலும் நன்மையை ஏற்படுத்தி தரும். லாபம், சந்தோஷம், அனுகூலம் உண்டாகும். மன வருத்தங்கள் தீரும். தொழில், வியாபார ரீதியான பயணங்களை மேற்கொள்ளும் அமைப்பு உண்டாகும். மன அழுத்தத்தை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பிள்ளைகள், மனைவி, மேலதிகாரிகள், சகஊழியர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலை ஏற்படும்.
அனுகூலம்
மன அழுத்தம் இருந்தாலும் உங்களை நேசிப்பவர்களிடம் பொறுமையாகப் பேசி அதில் இருந்து படிப்படியாக வெளியில் வருவது நன்மையைத் தரும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் அனுகூலத்தைப் பெறுவார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், சமுதாயத்திலும் காப்பற்றக் கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறுவது ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தேக ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்தத்தில் பரவக்கூடிய தொற்று நோய்ப் பிரச்சனைகளில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இதனால், 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும் குழப்பத்திற்கும், சங்கடத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
செல்வாக்கு அதிகரிக்கும்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருப்பதால் உங்களை நீங்களாகவே மாற்றிக் கொள்வது நன்மையையும், சந்தோஷத்தையும், லாபத்தையும் ஏற்படுத்தும். சிம்ம ராசிக்காரர்களுக்கு நிச்சயமாக திடீர் அதிர்ஷ்டம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு அனுகூலங்கள் காணப்படும்.
தடைகள் நீங்கும்
பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்களுக்கு பரிபூரண நிவர்த்தி ஏற்படும். வாகனங்களில் வித்தைகள் காட்டாமல் இருப்பது மிகவும் முக்கியம். தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிச்சயமாக நல்லது நடக்கும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications