துலாம் ராசிக்கு ட்விஸ்ட் காத்திருக்கு.. புதிய அறிமுகத்தால் வரும் ஆபத்து.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம் வார ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும். மன வருத்தங்கள் அனைத்தும் நீங்கும். பெற்றோர், பெரியவர்களிடம் வாக்குவாதம், மன வருத்தம் வருவதை தவிர்ப்பது நல்லது. பண வரவு அதிகரிக்கும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள்.
பிரச்சனைகள் நீங்கும்
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் காணப்படும் பாதிப்புகள் நீங்கும். வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். அனுகூலம் ஏற்படும்.
ஆரோக்கியம்
இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியா மாறும் நல்ல காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்கள், உணவு பழக்கவழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலர்ஜி, ஒவ்வாமையில் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அண்டை, அயாலரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
புதிய நபர்களால் ஆபத்து
புதிதாக அறிமுகமாகும் நபர்கள் உங்களுக்கு ஏற்றாற்போல யார் பேசினாலும் அவர்கள் பக்கம் சாயாமல், இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாமல் இருப்பது நல்லது. சூழ்ச்சி, சூதுவில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் மிக கவனமாக இருப்பது நல்லது. புதிய நபர்களிடம் பேசினாலும் அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்
வழிபாடு, பரிகாரம்
ஆலங்குடி குரு ஸ்தலத்துக்குச் சென்று வருவது அனைத்து விதமான ஏற்றத்தையும் ஏற்படுத்தும். தென்குடி திட்டத்தை மாற்றங்களை ஏற்படுத்தும். நவக்கிரகத்தில் இருக்கும் குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்ல முன்னேற்றத்தையும், அனுகூலத்தையும் கொடுக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications