ராஜா பகவத் மாதிரி வாழப்போகும் துலாம், விருச்சிகம், தனுசு.. சில விஷயத்தில் கவனமும் தேவை
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான (ஜூன் 9 முதல் 15) பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கழுத்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது அனுகூலத்தை தரும். பெரிய அளவு சந்தோஷம், பெரிய அளவு ஏற்றத்தைக் கொடுக்கும். யோக பலனை அதிகமாகப் பெறக்கூடிய ராசியினர் நீங்கள். இதுவரை இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். பெற்றோர், பெரியோர் விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் செய்யும்போது, விரையங்கள் விஷயங்களில் கவனம் தேவை. சோம்பலாகவே இருக்கும் சூழ்நிலை காணப்படும். எழுந்தவுடன் குளித்துவிடுவது மிகவும் நன்மை பயக்கும். இல்லையெனில் சோம்பேறித்தனம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தலைவலி, மன அழுத்தம், ரத்த அழுத்தம், கழுத்துக்கு மேல் உள்ள பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் வெள்ளிக்கிழமைகள் அனுகூலமான அமைப்பைத் தரும். மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சட்ட விரோதமான விஷயங்கள், வண்டி, வாகனம், கூட இருப்பவர்களால் பிரச்சனை, அவப்பெயர், மன அழுத்தம் ஏற்படும்.
மனசோர்வு ஏற்படுவது, நேர்மைக்கு மரியாதை இல்லாமல் போவது, உழைப்பை கேவலப்படுத்துவது, உறவு நட்பு, வெளியிடத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆனி மாதத்தில் விருச்சிகம் கொஞ்சம் அமைதியாக இருப்பது நல்லது. பிடித்த தெய்வ மந்திரங்களை கேட்பது அனுகூலத்தை ஏற்படுத்தும்
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் குடும்பத்தில் கோபதாபமில்லாமல் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவி இருவரும் சண்டை, சச்சரவு செய்யாமல் வெள்ளைக் கொடி காட்டிச் செல்வது நல்லது. தோல் சார்ந்த பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கால்சியம், விட்டமின் குறைபாடு, முட்டி வலி, கை கால் வலி, இருமல் போன்ற பிரச்சனைகள் வந்தால் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. புதன்கிழமை தோறும் தானம் செய்வது, தெய்வ வழிபாடு செய்வது, பசு மாட்டிற்கு உணவளிப்பது அற்புதத்தை ஏற்படுத்தும். கோபத்தை மட்டும் தவிர்த்துக் கொண்டால் நல்லது. மற்றபடி அனைத்து விஷயங்களிலும் நன்மை, அனுகூலம் ஏற்படும். நல்ல தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம், பெரிய முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications