பணக்கார யோகம் பெறும் துலாம், விருச்சிகம்.. தொழிலில் மிகப்பெரிய ஏற்றம்.. இந்த ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: ஏப்ரல் 28 முதல் மே 4 ஆம் தேதி துலாம், விருச்சிக ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு யோக பலத்தை அதிகம் பெறப்போகும் ராசியினர் நீங்கள். கொடுத்த வாக்கில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். விநாயகருடன் முருகன் வழிபாடு வார்த்தையில் நம்பிக்கையையும், குடும்பத்தில் நிம்மதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும். வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். சுப விரையப் பிராப்தம் உண்டாகும். வீடு கட்டுவது, புனரமைப்பது போன்ற சிக்கல்கள் தீர்ந்து சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தி தரும்.
தொழில் ரீதியாக இருந்த மன வருத்தம் படிப்படியாக நீங்கும். எதிர்பார்க்காத விஷயங்கள் கைகூடும் அமைப்பு உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட சகலவித நன்மைகள் பெரியளவு ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நீண்டநாள்களாக இருந்த மனபாரங்கள் பரிபூரணமாக நிவர்த்தி அடையும்.
தேக ஆரோக்கியத்தில் ஒவ்வாமை, பற்களில் வரும் பிரச்சனைகளை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. உள்ளூர், வெளியூர், தொலைதூர பயணங்களுக்கு அடித்தளமிடும் நல்ல காலகட்டமாக இருக்கும். துணைக்கும், உங்களுக்கும் இருந்த மனத் தாங்கல்கள் தீரும். பெரிய அளவில் நம்பிக்கையும், ஆத்ம ரீதியான நிம்மதியையும் பெற்றுத் தரும். உறவு முறையில் காணப்பட்டிருந்த சிக்கல்களில் பரிபூரண நிவர்த்தி ஏற்படும்.
புரோமோஷனில் இருந்த தடைகள் நீங்கும். புதிய தொழில் அமைப்புக்கு மாறுவீர்கள். சுப காரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். ரத்த பந்த உறவுகளுக்கும், உங்களுக்கும் இருந்த கொடுக்கல் வாங்கல்கள் முடிவுக்கு வருவது ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தைரியம், தொழில் ஏற்றம், வியாபார ஏற்றம், உத்தியோக ஏற்றம் என எல்லாவிதத்திலும் ஏற்றத்தைப் பெறுவீர்கள். சூரியனின் ஆதிக்கம் பிரம்மாஸ்திரத்தை கொடுக்கும். சூரியன் உச்சம் பெறுவதால் தெம்பாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.
ஜோடியாக இருக்கக்கூடிய முருகர் வள்ளிதெய்வானை, பெருமாள் தாயார், சிவன் பார்வதி என ஜோடியாக இருக்கக்கூடிய வழிபாடுகள் சகலவிதத்திலும் நன்மையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். தாயார், தந்தையாரை கும்பிடுவது பெரிய பலத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
தேக ஆரோக்கியத்தில் சுழுத்து, ஜாயிண்ட் பெயின் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உயரமான இடங்கள், படிக்கட்டுகளில் இறங்கி நடக்கும்போது எச்சரிக்கை தேவை. பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய வண்டி வாகனங்களில் கவனம் நல்லது. பிள்ளைகளுடன் தேவையில்லா குழப்பம், கூடா நட்பால் பிரச்சனைகள் ஏற்படும்.
பண வரவு, முதலீடுகளுக்குப் பஞ்சம் இருக்காது. யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய ராசிகளில் விருச்சிக ராசியும் ஒன்று. தொழில் ரீதியாக முதலீடுகளால் அனுகூலத்தையும், சந்தோஷத்தையும் அதிக அளவில் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் மேன்மை அடையக் கூடிய காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications