துலாமிற்கு பேச்சில்தான் பிரச்சனையே.. விருச்சிகத்துக்கு டாப் கிளாஸ் யோகம்.. அள்ளித்தரும் அஷ்டலட்சுமி

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சித்திரை 29 முதல் வைகாசி 4 வரை அதாவது மே 12 முதல் 18 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்ப் புத்தாண்டின் சித்திரை மாதம் முடிந்து, வைகாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-thulam-viruchigam-libra-scorpio-people-will-get-in-may

கிரகங்களின் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலர்ஜி, தலை வலி, காது மூக்கு தொண்டை, கழுத்தும் சம்பந்தப்பட்ட வலிகள், மயக்கம், ஹீமோகுளோபின் குறைபாடு போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். பாஸ்போர்ட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

செல்போன், ஸ்கேனர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்யும் நபர்களின் நிழல் கூட அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெருமாள் தாயார், ஆஞ்சநேயர் இருக்கக்கூடிய விசேஷமாக இருக்கும். தாமரை மலர்களைக் கொண்டு வழிபடுவது நல்லது. மேலதிகாரிகளிடம் தர்க்கம் செய்வது, உத்தியோகத்தில் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது.

மிகுந்த கவனத்துடன் இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். யாரிடம் பேசினாலும் பேசும் வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளுக்கு அறிவுரைகளை சொல்வதை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு ஏற்படும். தாய் வழி, தந்தை வழி உறவுகளில் ஏற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்தில் காப்பாற்றக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். அஷ்டமலட்சுமி கடாட்சம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.

ஆனந்தம், பேரானந்தம், பரமானந்தம் ஏற்படும். தாய் வழி, தந்தை வழி உறவில் ஏற்றம் ஏற்படும். துணை அல்லது துணைவியாரின் தேக ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். படபடப்பில்லாமல் இருக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

விருச்சிகத்திற்கு எப்போதும் நன்மை, அனுகூலத்துடன் இருப்பதற்கு சிவனுடன் இருக்கக்கூடிய பார்வதி தேவியை வழிபாடு அமோகமான ஏற்றத்தை தரும். பார்வதி தேவியின் சன்னிதானத்தில் வெண் மலர்களைக் கொடுத்து, குங்குமம் கொடுத்து மனதார வழிபடுவது அருமையான பலன்களைத் தரும். குடும்பத்தில் யார் எது சொன்னாலும் துணையைப் பற்றி மட்டும் எந்தவித குறையும் சொல்லாமல் இருப்பது புத்திசாலித்தனம்.

பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். வைகாசி மாதம் பல அற்புதங்களைத் தரும் மாதமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+