விருச்சிகத்தை வச்சு செய்யும் கிரகங்கள்.. மீண்டும் வரும் பிரச்சனைகள்.. வாய்க்கு பூட்டு போடுவது நல்லது
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் முருகர் வழிபாடு செய்வது அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரம், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், கால்நடை தொடர்பான விஷயங்களில் அனுகூலமும், ஜெயமும் ஏற்படுத்தும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 பாடலை தினந்தோறும் சொல்லி வந்தால் படிப்படியாக பிரச்சனைகள் தீரக்கூடும்.
ஆரோக்கியம்
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கழுத்து, வாய், தொண்டை, காது, பற்கள், மூக்கு, கண்கள், தலை சம்பந்தப்பட்ட சிறு பிரச்சனைகளும் பெரிய அளவு மனக் கஷ்டமும், மன அழுத்தமும் ஏற்படும். மேலதிகாரிகளிடம் கோப தாபத்தை தவிர்ப்பது நல்லது. அதனால் அனுகூலம் ஏற்படும். தேவையில்லாத குழப்பம், மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வெற்றி, அனுகூலம்
எதிரிகளின் முயற்சிகள் உங்களுக்கு எதிராக வெற்றியை ஏற்படுத்தும். அதனால், எதிரிகள் விஷயத்தில் ஆவேசப்படுவது, எதிர்ப்பைக் காட்டுவது, அவசரப்பட்டு விரோதத்தை காட்டுவது பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. திட்டமிட்டு செய்யக்கூடிய விஷயங்களில் கோபதாபத்தை தவிர்ப்பது நன்மையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தியை ஏற்படுத்தும்.
பேச்சில் கவனம்
இழுபறியாக இருந்த நிலைமைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வது, நீங்கள் அமைதிப்படுத்திக் கொள்வது நல்லது. அக்கம்பக்கம், நண்பர்கள், உறவினர்கள், வேலை செய்பவர்களிடம் போனில் எதுவும் பெரிதாக பேசாமல் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது.
வழிபாடு
புதிய முயற்சிகளில் சிறிது தடைகள் காணப்பட்டாலும், அனுமனை வழிபட்டு ஆரம்பிக்கக்கூடிய விஷயங்கள் வெற்றியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் வழிபாடோடு சேர்த்து அனுமன் வழிபாடு செய்வது வாழ்க்கையில் வெற்றியை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications