கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூன் 23 முதல் 28 ஆம் தேதி (ஆனி 9 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-will-get-dhanusu-rasi-people-from-june-23-to-28

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், தனுசு, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 23 முதல் 28 ஆம் தேதி (ஆனி 9 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினர் துணையைப் பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் துணையை விட்டுக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும் என்பதால் வேலை ஆட்களை எதிர்பார்த்து வாழ்வதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கழுத்து, முதுகு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

அர்த்தாஷ்டம சனி

அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் நடக்கும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புதிய தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்யக்கூடிய அமைப்பு உள்ளது. உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

திருமண யோகம்

பிள்ளைகளுக்கு நிறைய சந்தோஷங்கள் ஏற்படும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த சாபங்கள் தீரும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். அடிவயிறு, கழிவுப் பாதை, கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். எதிரிகள் பிரச்சனை தீரும்.

கவனம்

பணப் பற்றாக்குறை இருக்கும் என்பதால் எந்த விஷயத்தையும் அவசரப்பட்டு செய்யாமல் இருப்பதே நல்லது. தேவையில்லாத பழக்கங்கள், நட்புகளைத் தவிர்ப்பது நன்மை. இல்லையெனில் சட்ட சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதயம், கொழுப்பு பாதிப்புகளில் கவனம் தேவை. நிறைய பேருக்கு நல்ல வேலை கிடைக்கும்.

வழிபாடு

விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். காரியசித்தி மாலை கேட்பது நன்மையைத் தரும். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுக்கு கோதுமை கலந்த உணவளிப்பது மேன்மையைத் தரும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும். மிருத்யுங்ஜெயன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+