Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..!
Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியான நல்ல விஷயங்கள் ஏற்படும். முன்னேற்றம், தன்னம்பிக்கை உண்டாகும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். காதல் அமைப்பில் ஏற்றம் ஏற்படும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரும் யோகம் உண்டாகும். பிரிந்த காதலர்கள் சேரும் அமைப்பு உள்ளது.
காதல் கைகூடும்
புதிய காதல் கைகூடக்கூடிய யோகம் உண்டு. திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் அனுகூலங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழிலில் ஏற்றமும், அனுகூலமும் காணப்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், அரசியல்வாதிகளுக்கு வரும் திடீர் வாய்ப்புகளைப் பயன்டுத்திக் கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு
வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். படிப்புத் தடைகள் பரிபூரண நிவர்த்தியாகும். முக்கியமான வாரமாக இருக்கும். 10 ஆம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் மெடிஷன், நீட் தேர்வில் வெற்றி பெறும் யோகத்தத்தை தரும். பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் மாறப்போவதால் கழிவுப் பாதை, அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.
தடை நீங்கும்
முயற்சிகள் அனைத்தும் தடைபட்டு வெற்றிகளைத் தரும் அமைப்பு உள்ளது. லாபத்தில் இருக்கும் குரு சுக்கிரனால் நட்புகள் மூலமாக நல்லவை நடக்கும். வீட்டுக்கு புதிய வரவுகள், நண்பர்கள் வரக்கூடிய யோகம் உண்டு. பூர்வீக சொத்து தொர்பான விஷயங்களில் அடிதடி ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. திருத்தணி முருகன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். மிகப்பெரிய நன்மைகள் உண்டாகும்.
வழிபாடு
கால், தொடை, கட்டி, சூட்டு கொப்பளம் போன்றவை வரும வாய்ப்புள்ளது. அலர்ஜி, விட்டமின் குறைபாடு, வலிகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications