Kanni: கன்னி ராசிக்கு லாப யோகம்.. அரசு வேலை, தொழிலில் வெற்றி, உறுதி!
Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்திற்கு பிரவேசமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் **கன்னி ராசியினருக்கு** கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு லாபங்கள் நிறைந்த மாதமாகவும், வாரமாகவும் அமையும். பழைய நட்புகள், காதல்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மூத்த பெண்களிடம் வாக்குவாதம், பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குரு பணம், வெற்றியைக் கொடுத்தாலும் தகவல் தொடர்பில் தவறான விஷயங்களை உங்களிடம் சொல்வார்கள்.
கவனம்
உண்மைக்குப் புறம்பான விஷயம், மாற்றி மாற்றி பேசுவது போன்றவற்றில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. எந்த விஷயங்களைச் செய்தாலும் அதனை தீர விசாரித்துச் செய்வது நன்மையைத் தரும். பாக்கியத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சிறிது பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் வண்டி வாகனங்கள், கண், பல் பகுதிகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
யோகம்
சொத்துகள் தொடர்பான பஞ்சாயத்துகள் இருந்தால் நேரடியாக சென்று சண்டைகள் வைத்துக்கொள்ளாமல், புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. அரசு வேலை, நீட்டில் கிளியர் ஆவது போன்ற யோகம் உண்டாகும். நண்பர்களிடம் எந்தவொரு விஷயத்தையும் வெளிப்படையாக சொல்லாமல் இருப்பது நன்மையைத் தரும். மூத்தவர்களின் பிரச்சனைகளுக்குள் தலையிடாமல் இருப்பது அவசியம்.
சிக்கல் தீரும்
தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். துணை விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். தொழில் சார்ந்த விஷயங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்மைகள் காணப்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் சரியாகும். அனுகூலமான அமைப்பு உண்டு. இடமாற்றம் ஏற்படும். பெரிய அளவுக்கு கஷ்டமும், நஷ்டமும் ஏற்படும் அமைப்பு உள்ளது.
அனுகூலம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, அரசுத் துறை, அரசியல்வாதிகள், களத்தில் இறங்கி உங்களுக்குத் தேவையானவற்றை சாதித்துக் கொள்வது நன்மையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். குடும்பத்தில் துணை விஷயத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
வழிபாடு
தொழிலில் கவனம் செலுத்துவது அற்புதமான முன்னேற்றங்களை ஏற்படுத்தும். மகான்கள் வழிபாடு உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். சந்தோஷம், பொருளாதார ஏற்றம் 80 சதவீதம் நன்றாக இருக்கும். லட்சுமி நாராயணப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications