கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-will-get-kumbam-rasi-people-from-june-1-to-7th

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசி, லக்கினம் சார்ந்தவர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் பெறும் காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் மாறும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பாக நிறைய நல்லவை நடக்கும். 60 வயதிற்கு உட்பட்ட கும்ப ராசியினருக்கு நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டு. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

கவனம்

வயிறு, மறைமுக ஸ்தானங்களில் வரும் பாதிப்புகளில் கவனம் தேவை. எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது விதிமுறைகளை கட்டுப்படுத்தி பொறுமையாக செல்வது நன்மை பயக்கும். மற்றவர்களைப் பற்றி தேவையில்லாமல் சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

அனுகூலம்

தொழில், உத்தியோகம்,வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட முறையில் நிறைய யோக பலன்கள் கிடைக்கும். இளம் வயதை சார்ந்தவர்களுக்கு நன்மைகள், அனுகூலம், சுபகாரியங்கள் என்ற நல்ல அமைப்பு உள்ளது. பதவி உயர்வுகள், முன்னேற்றம் ஏற்படும். ராகு ஜென்மத்தில் இருப்பதால் தேவையில்லாத குழப்பங்கள் வரக்கூடும்.

புதன், சுக்கிரன்

பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சேர்ந்திருப்பதால் காதல் உறுதியாகும். நிறைய புதிய விஷயங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் பெரிய அளவுக்கு சந்தோஷம் ஏற்படும். வயது மூத்த பெண்களாக இருப்பவர்கள் உறவுகள் விஷயத்தில் கவனம் தேவை. ஆண்கள் எதிர் பாலினத்தவரிடம் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். அதிகளவில் சிந்திக்கும் சூழல் ஏற்படும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும்.

வழிபாடு

4, 5, 6 வேலை நிமித்தமான இடமாற்றம், புதிய வேலை, வியாபாரம், பயணம், முதலீடுகளில் வெற்றி ஏற்படும். இல்லற வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். மன வலிமை அதிகரிக்கும். கிரெடிட் கார்டு லோன், அதிக வட்டிக்கு வாங்கிய லோன்களை அடைக்கும் அமைப்பு உள்ளது. சத்தமில்லாமல் செய்யக்கூடிய வேலைகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கும். ஸ்ரீ ராகவேந்திரர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். எதிர்பார்க்காத நல்லவைகள் நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+