குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட்
Weekly Rasi Palan: ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகர ராசி பலன்
மகர ராசி, லக்கினம் சார்ந்தவர்களுக்கு லாபம் அபரிமிதமானதாக இருக்கும். அனுகூலமான காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முதலீகளை செய்து மகிழ்வீர்கள். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் ரீதியாக ஏற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும்.
கவனம்
எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கோபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோரிடம் மன வருத்தங்கள் ஏற்படாமல் இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, சுபகாரியங்கள் என அடுத்தடுத்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பம் தொடர்பான விஷயத்தில் அடுத்த குருப்பெயர்ச்சி வரை கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் மற்றும் வேலை
தனித்திறமை
பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும் வாய்ப்பு உள்ளது. புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை மாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கக்கூடும். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் காணலாம்.
பணவரவு
இந்த வாரம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் வரவேண்டிய பணம் கைக்கு வரலாம். முதலீடுகளில் அவசர முடிவுகளை தவிர்த்து நிதானமாக செயல்படுவது நல்லது.
வழிபாடு
மற்ற அனைத்து விஷயத்திலும் ஏற்றம் பெறுவீர்கள். ராகு இருப்பதால் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கையிருப்பு பணம் அதிகரிக்கும். வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கம் ராகு, கேது பகவானை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிக்குமா ஜாக்பாட்?.. குருவின் அருள் கிடைக்குமா? -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications