Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது
Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசியினருக்கு யோகமான காலகட்டமாக உள்ளது. வீடு வாங்குவது, வீட்டுவது, சொத்துகள் வாங்குவது, மனைவி பெயரில் சொத்துகள் வாங்குவது, கார் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். வீட்டில் குழந்தை பாக்கியம் உண்டாகும். பதவிகள் உங்களைத் தேடி வரும். நிறைய விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
குரு சுக்கிரன்
களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குரு சுக்கிரன் ஏற்றத்தைக் கொடுப்பார். அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். எல்லா விஷயங்களும் நீங்கள் நினைத்தது போல நடக்கும். பெரிய மாற்றங்களும், முன்னேற்றங்களும் கிடைக்கும் காலகட்டம்.
பணவரவு
வண்டி, வாகனங்களில் வித்தைகள் காட்டுவதை தவிர்ப்பது நல்லது. நல்ல பணவரவு உண்டாகும். எதிரிகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது மேன்மையைத் தரும். புதன்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு தானமளிப்பது நல்லது.
புரோமோஷன்
பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் வந்து சேரும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். தொழில் ரீதியாக நிறைய நல்லவை நடக்கும். வியாாரத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். இழுபறியாக இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். புதிய முயற்சிகளில் அனுகூலம் காணப்படும். தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும்.
யோக பலன்
நிறைய நல்லவை நடக்கும் காலகட்டம். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நன்மைகள் ஏற்படும். எதிர்பார்க்காத அற்புதம் ஏற்படும். புதிதாக நிறைய விஷயங்களைச் செய்து அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. தைரியமாக திட்டமிடலாம்.
வழிபாடு
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. மருத்துவ சீட் கிடைக்கும். மருத்துவராகும் யோகம், அரசுத் துறையில் இடம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். விஜயலட்சுமி தேவி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications