ஆட்டத்தை ஆரம்பிக்கும் மீன ராசியினர்.. தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி.. பண மழை கொட்டும்
Weekly Rasi Palan: ஜூன் 24 முதல் 28 ஆம் தேதி (ஆனி 10 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், மகரம், மீன ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 24 முதல் 28 ஆம் தேதி (ஆனி 10 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீன ராசி பலன்
மீன ராசிக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கலை நயமிக்க சிற்பங்களை வாங்குவீர்கள். ஆடை, அணிகலன்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. வீட்டுத் தேவையான பொருள்கள், கட்டில், சோபா வாங்கும் யோகம் உண்டாகும். நிறைய சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவீர்கள். உங்களைப் பலரும் புகழ்ந்து தள்ளுவார்கள். கழுத்து வலி, தொண்டை வலி என அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும்.
யோகம்
யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குலதெய்வத்தை மானசீகமாக மனதில் வழிபாடு செய்வது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு ஏற்றம் ஏற்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
முன்னேற்றம்
நிறைய லாபங்கள் கிடைக்கும் காலகட்டம். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத்தாங்கல்கள் தீரும். ஏற்றங்கள் அதிகளவில் கிடைக்கும் நல்ல காலகட்டம். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் ஏற்றம் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தனிப்பட்ட செல்வாக்கு அதிகரிக்கும். நிறைய நல்ல காரியங்கள் நடக்கும். எல்லா நல்ல விஷயங்களையும் நீங்கள் தொடங்கலாம்.
தொழில்
கலைத் துறை, மீடியா, அரசுத் துறைகளில் பெயர், புகழ் ஏற்படும். ரத்த பந்த உறவுகளிடம் வாக்குவாதங்கள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உறவுகளின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. 25, 26, 27 ஆம் தேதி உங்களுக்கு அற்புதமான நேரமாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். புதிய கோர்ஸ்களை படிப்பீர்கள்.
வழிபாடு
ஜோதிடம் கற்றுக்கொள்ளும் அமைப்பு உள்ளது. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். அற்புதமான நேரம் உங்களுக்கு இருப்பதால் எல்லா விஷயங்களும் சாதகமாக நடக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும். நிறைய புதிய விஷயங்கள் நடக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications