இந்த வார ராசிபலன் (ஜூலை 27 - ஆகஸ்ட் 2): மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்?
Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு ஏற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஏற்றங்கள், பயணங்கள் ஏற்படும் காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கெளரவம் ஏற்படும். நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அலர்ஜி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேலை. பெருமாள் வழிபாடு, ஸ்தோத்திரங்களைப் படிப்பது நிம்மதியை ஏற்படுத்தும்.
உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக பெரிய முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். எதிரிகள் உங்கள் வசமாவார்கள். சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு நிறைய லாபங்கள் கிடைக்கும். சந்தோஷமும், பணவரவும் அற்புதமாக இருக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ஆடி பூரத்தில் நிறைய நல்லவற்றை வாங்கி மகிழ்வீர்கள். காது, மூக்கு, தொண்டை, சளி தொடர்பான விஷயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உறவினர்கள், துணை விஷயத்தில் ஏற்றம் பெறுவீர்கள்.
குடும்பத்திற்குத் தேவையான விஷயங்களை எல்லாம் மேற்கொள்வீர்கள். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள், அடுத்தடுத்து சுப காரியங்களைச் செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான இன்டீரியர் டெக்கரேஷன்களை செய்து மகிழ்வீர்கள். எல்லா விஷயங்களிலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படுத்தும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்கும் பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தங்க ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும். யோக பலன்களும், நிம்மதியும் கிடைக்கும்.
கழுத்து, தொண்டை, கைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் சென்று வருவது நல்லது. நகை காணாமல் போவது, பின்னர் கிடைப்பது போன்ற அமைப்பு உண்டாகும். விரயத்தில் செவ்வாய் இருப்பதால் மனைவியின் ஆரோக்கியம், கால் பாதத்தில் கவனம் தேவை. ஆண்கள் இரவு நேர பயணத்தில், உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு நிம்மதியற்ற தன்மை ஏற்படும். உடனிருப்பவர்கள், வேலையில் இருப்பவர்கள், படிக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள், உறவினர்கள், குடும்பத்தினரால் ஒருவிதமான பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்வதற்கான காலகட்டம். அனுமனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனம் தேவை.
தூக்கமின்மை, அதீத ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. துணை சொல்வதை கேட்டு நடப்பது நன்மை பயக்கும்.பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெற்றோர், பெரியவர்களிடம் இருந்து வந்த மன தாங்கல்களை சமூகமாகத் தீர்த்துக் கொள்வது நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு காதல் கைகூடும். குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள், பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இன்பச் சுற்றுலா, ஆடம்பர சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். புத்துணர்ச்சிக்காக ஆயுர்வேத சிகிச்சைக்குச் சென்று வருவீர்கள். லாப ஸ்தானத்தில் புதன் இருப்பதால் நண்பர்கள் மூலம், பொருளாதாரத்தின் மூலம் லாபம் ஏற்படும்.
எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். விரயத்தில் இருக்கும் சூரியன், குரு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் கொடுப்பார். புதிய கடன்கள் கிடைக்கும். அரசு வங்கியில் இருந்து கடன் கிடைக்கும். வெளியூர் பயணம் ஏற்படும். வெளிநாடுகளில் செட்டிலாகக் கூடிய யோகம் உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் பிரச்சனைகள், டென்ஷன், கோபம் போன்றவை ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு லாபம், சந்தோஷம் ஏற்படும் காலகட்டம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதிக சம்பளத்திற்குச் செல்லும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம், நன்றாக இருக்கும். படிப்பில் ஏற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள், சிக்கல்கள் எல்லாம் தீரும்.
கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். வேலையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். எதிர்பார்க்காத அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் ஏற்படும். முட்டி, முதுகு வலி சுழுக்கு போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட தேவையில்லா சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். உறவுக்குள் இருந்து வந்த சிக்கல் தீரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். வாகனத்தில் அனுகூலம் ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நம்பிக்கையும், அனுகூலங்களும் ஏற்படும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் குரு அமர்ந்திருப்பதால் தைரியம், வீரியம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு சார்ந்த நபர்களுடன் தொடர்புகள் ஏற்படும். எல்லா விதமான சந்தோஷங்களும் உண்டாகும். எல்லா விஷயங்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். செய்யும் காரியம், எடுக்கும் காரியம் அனைத்தும் தள்ளிப் போனாலும் அவை நடக்கும் யோகம் உண்டாகும். எந்த விஷயத்திற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பொறுமை, நிதானத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்தாலே நன்மைகளும், பெரிய வாய்ப்புகளும் வந்து சேரும். எல்லா விஷயத்திலும் பொறுமை உங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் யோகம் உண்டு. பிள்ளைகளுக்கு அரசு சார்ந்த சீட் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். 15 நாட்களுக்குப் பிறகு அற்புதமான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு பாக்கிய ஸ்தானம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. தொலைதூரப் பயணம், இன்பச் சுற்றுலா சென்று வரும் யோகம் உண்டாகும். சனி வக்கிரமாக அமர்ந்திருப்பதால் சொந்த பந்தங்கள் தொடர்பான பிரச்சனை, அம்மா வீடு பிரச்சனை, நிலப் பிரச்சனை, பத்திரப் பிரச்சனை நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். எதிர்பாராத நட்புகள், நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
பாசிட்டிவான சூழ்நிலை ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிஎப், கிராஜுவிட்டி வந்து சேரும். நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை, செலவுகளை செய்து கொடுப்பீர்கள். பிள்ளைகளுடைய கஷ்டங்களை எல்லாம் தீர்த்துக் கொடுப்பீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். உச்சம் பெற்ற குருவை சூரியன் தொடுவதால் அரசு சார்ந்த, அப்பா சார்ந்த விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். மகன்களுக்கு குழந்தை பிறக்கும். திருமண யோகம் உண்டாகும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கழுத்து, கை பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.
நிலம், வீடு, ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். எல்லா விஷயங்களிலும் தடைபட்டிருந்தாலும் இந்த காலகட்டத்தில் சரியாக நடக்க ஆரம்பிக்கும். தைரியமாக பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெரிய ஆற்றலும், தன்னம்பிக்கையும் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். இதயம் சம்பந்தமான பாதிப்புகளில் கவனம் தேவை.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக அற்புதமான முன்னேற்றம் காணப்படும். 70 வயது வரை இருக்கும் கும்ப ராசியினருக்கு சகலவித முன்னேற்றங்கள் காணப்படும். நிறைய நன்மைகள் உண்டாகும் காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தேவையில்லாத நண்பர்களிடம் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது.
எந்த நல்ல விஷயங்களில் என்னவித முடிவுகளை எடுப்பதானாலும் அதனை சிவன் வழிபாடு செய்த பின்பு எடுப்பது நன்மையைத் தரும். முதுகு, காது, மூக்கு, தொண்டை, தலை, முகம் சார்ந்த பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரும் செல்வாக்கு ஏற்படும். சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
மீனம் ராசி பலன்
மீன ராசியினருக்கு உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்திலும் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
உத்தியோகம், தொழில் ரீதியாக எதிர்பார்த்த அனைத்து விதமான நன்மைகளும் நடக்கும். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். கோளார் பதிகத்தை சொல்லி வருவது ராகு கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். பண வரவு நன்றாக இருக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். ஜென்மசனி வக்கிரத்தில் இருப்பதால் உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications
