Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது
Weekly Rasi Palan: ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு யார் என்ன பேசினாலும் அதற்கு கோபப்படாமல் பேசுவது நன்மையைத் தரும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். எதிரிகள் விஷயத்தில் வெற்றிகள் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். இழுபறியாக இருந்த பலவிதமான சிக்கல்கள் மாறும்.
சிக்கல் தீரும்
நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள், சங்கடங்கள் எல்லாம் தீரும் காலகட்டம். உத்தியோக ரீதியாக நீங்கள் நினைக்கும் விஷயங்கள் அனைத்தும் நடக்கும். வீட்டுக்குத் தேவையான இன்டீரியர் டெக்கரேட் செய்யும் வாய்ப்புள்ளது. வீடு கட்டுவது, வண்டியில் மாற்றங்கள் செய்வது போன்ற யோகம் உண்டாகும். உங்களுக்கு சாதகமான காலகட்டமாக இருக்கும்.
அனுகூலம்
மன அழுத்தம் தீரும். பயணங்கள் விஷயங்களில் அனுகூலம் காணப்படும். பயணங்கள் மூலமாக பெரிய நல்ல நட்புகளை சந்திப்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத யோகம் ஏற்படும். சிலரின் ஆதரவுகளால் பெரிய தொழிலதிபர்களாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆசிர்வாதம் உண்டாகும். அதிகாரிகள், அமைச்சர்கள், சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களின் சந்திப்புகள் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டம்.
சொத்து வாங்கும் யோகம்
நிறைய ஆடம்பரப் பொருள்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் ஆட்சி பலம் பெற்றுள்ளதால் சந்தோஷமும், மேன்மையும் ஏற்படும். ஆண்கள், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பல் வலிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு கால்சியம் குறைபாடு, தலைவலி வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குருப்பெயர்ச்சி அடைவதால் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, சொத்துக்கள் வாங்குவது, ஆடை வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும்.
வழிபாடு
ஆன்லைனில் நிறைய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம், புதிய வேலைவாய்ப்பு, வேலையில் பொறுப்புகள் கிடைக்கும். கல் குவாரி, கட்டுமானம், மணல் துறையில் இருப்பவர்களுக்கு லீஸ், உரிமம் கிடைக்கும். முருகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். சுப்பிரமணிய புஜங்கத்தை பாராயணம் செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications