மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. இந்த வார பலன்.. முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-will-get-mesham-rishabam-mithunam-rasi-people-during-this

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம், ரிஷபம், மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு இந்த வாரம் பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான முன்னேற்றங்கள் ஏற்படும். மனதில் இருந்த படபடப்பு, பதட்டம் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். பணம் தொடர்பான சிக்கல்கள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். புதிய பொறுப்புகள் மற்றும் வாய்ப்புகள் தேடி வரும். அரசுத் துறை, அரசியல், அரசு மற்றும் தனியார் வேலைகளில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், முன்னேற்றங்கள் கிடைக்கும். உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி காணப்படும்.

இந்த வாரம் பெரிய அளவில் முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நல்ல பெயர், புகழ் கிடைக்கும். பதவி உயர்வு, அரசு சார்ந்த ஆவணங்கள் மற்றும் முக்கிய அனுமதிகள் கைக்கு வர வாய்ப்பு உள்ளது. வீட்டில் மாற்றங்கள், அலங்கார பணிகள் போன்றவை நடைபெறலாம். இருப்பினும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக கண், பல், காது, மூக்கு, தொண்டை மற்றும் சைனஸ் தொடர்பான பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திங்கள்கிழமைகளில் குரு வழிபாடு, மகான்கள் வழிபாடு மற்றும் திருத்தணி முருகன் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும். இந்த வாரம் சந்தோஷம் சார்ந்த பலன்கள் 90% மற்றும் பொருளாதார பலன்கள் 70% வரை சாதகமாக அமையும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும். பிள்ளைகள் தொடர்பான கவலைகளும் தீரும். இருப்பினும் பேச்சில் கவனம் தேவை; தேவையற்ற வார்த்தைகள் சிக்கல்களை உருவாக்கலாம்.

சொத்து சேர்க்கை, புதிய முதலீடுகள் மற்றும் பயணங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் மற்றும் தொடர்புகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பணவரவில் குறைவு இருக்காது. ஆரோக்கியத்தில் உடல் சூடு, ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. முருகன் மற்றும் துர்க்கை வழிபாடு செய்தால் மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும். சந்தோஷம் 70% மற்றும் பொருளாதாரம் 80% வரை சாதகமாக இருக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு இந்த வாரம் நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரித்து, மனதில் மகிழ்ச்சி நிலவும். தங்கம் வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில், வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் காணப்படும்.

பழைய கடன்கள் அடையும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இருப்பினும் உங்களின் துணைவர் ஆரோக்கியம், கண் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. அனுமன் வழிபாடும், முருகப் பெருமான் வழிபாடும் சிறந்த பலன்களைத் தரும். சந்தோஷம் 90% மற்றும் பொருளாதாரம் 80% வரை சாதகமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+