மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு ஜாக்பாட்?.. பணம், பதவி, திருமண யோகம்!
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு அற்புதமான வாரமாக இருக்கும். முதலீடுகள் செய்வதைத் திட்டமிடுவீர்கள். வயிறு சார்ந்த பாதிப்புகள் வந்து போகும். வீடு கட்டுவது, பிளாட் வாங்குவது, புதிய வீட்டிற்கு குடிபெயர்வது போன்ற யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். இன்ப சுற்றுலா சென்று வருவீர்கள்.
மன அழுத்தம், பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சுக்கிரன வலுவிழந்து இருப்பதால் மற்றவர்கள் உங்களைப் பற்றி காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். யாரிடமும் கோபப்படாமல், வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு மிக முக்கியமான காலகட்டம். உத்தியோகத்தில் இருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வம்பு, வழக்குகள், சண்டைகள், கோர்ட் கேஸ்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நல்ல எண்ணங்கள் வரும். மெட்டல் வியாபாரம் செய்பவர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். கல், மணல், கட்டுமானம், குவாரி, ஆசிட், பிளாஸ்டிக் தொழில் செய்பவர்களுக்கு நல்ல அமைப்பு உள்ளது.
வீட்டில் இருந்து வந்த எலக்ட்ரிக், ஒயரிங் பிரச்சனைகள் அனைத்தும் நிவரத்தியாகும். தாயாரின் ஆரோக்கிய பாதிப்புகளை பார்த்துக் கொள்ள வேண்டும். கழிவுப் பாதை, கீழ் முதுகு, எலும்பு, நரம்பு பாதிப்புகள் வந்து நிவர்த்தியாகும். பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் அமைந்திருப்பதால் நட்பு வட்டாரங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளவது நல்லது. மனைவி, மூத்த குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு மன அழுத்தம் தீரும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிரிகள் தொர்பான பாதிப்புகள் நீங்கும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும்.
பயணங்களில் வெற்றிகள் காணப்படும். பைலட் ஆவதற்கான வாய்ப்பு, அதுதொடர்பான கோர்ஸ் படிப்பது, அறிவியல் அறிஞர்களாகும் வாய்ப்பு ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். கையிருப்பு பணம் அதிகரிக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். எல்லா விஷயங்களும் எளிமையாகவும், உங்களுக்கு சாதகமாகவும் நடக்கும்.
இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிறைய நன்மைகள் ஏற்படும் காலகட்டம். இழுபறியாக இருந்த விஷயங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு முகம் வசீகரமாகும். மனதில் சந்தோஷம் பிறக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். திருமண யோகம் உண்டாகும். நிறைய கஷ்டங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். விரயத்தில் செவ்வாய் புதன் வீட்டில் இருப்பதால் வாழ்க்கை துணைக்கு கால் பாதம், கழுத்து சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பல் சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்வீர்கள். தொண்டை உபாதைகள் வந்து சேரும். பழையதைக் கொடுத்து புதிய பொருள்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவும், வேண்டிய வகையிலும் நடக்கும் அமைப்பு உண்டாகும். நல்ல மாற்றங்கள் ஏற்படும். நிம்மதியான காலகட்டமாக இருக்கும். உடல் எடை கூடுவதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க உத்தியோகம், அரசாங்க சீட் கிடைக்கும். நிறைய மன குழப்பங்களில் இருந்து வெளியில் வருவீர்கள்.
எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். பகை உணர்வுகள் தீரும். டிசம்பர் மாதமாக குரு பகவான் அதிசாரமாக வருவதால் சுபவிரயம் ஏற்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். சுப விரயங்கள் ஏற்படும். சனி வக்கிரமாக இருக்கும்போது செலவுகளை செய்யாமல் இருப்பது நல்லது. விரயத்தில் குரு இருப்பதால் சுப விரயங்களைச் செய்வீர்கள்.
நிறைய பேர் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். புதிய விஷயங்களை எடுத்துச் செய்வீர்கள். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கும். எல்லா விஷயங்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு செய்வது வீட்டில் சுபிக்ஷத்தை ஏற்படுத்தும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்திருக்கிறார். மங்கள காரியங்கள் நிறைந்திருக்கும். திருமணம் நடக்கும் அமைப்பு உள்ளது. வீட்டில் திடீரென ஒருவர் பிரபலமாகும் வாய்ப்பு ஏற்படும். சந்தோஷமான நிகழ்ச்சி நடக்கும். குடும்ப வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரும் வாய்ப்புள்ளது. பதவி உயர்வு கிடைப்பது, பேரக் குழந்தைகள் பிறப்பது, உங்களுக்கே திருமணம் நடப்பது போன்ற யோகம் உள்ளது.
நீண்ட நாட்களாக காத்திருந்த காரியங்கள் எளிமையாக முடியும். வீடு, சொத்து, வாகனம் வாங்கக்கூடிய அமைப்பு உள்ளது. கன்னி ராசிக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். விரயத்தில் சூரியன், புதன், கேது இருப்பதால் ரகசியமாக பல காரியங்களை செய்து முடிக்கும் நேரம் உள்ளது. வெளிநாடு செல்லதும் அனுகூலம் காணப்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.
கழுத்து, தொண்டை பகுதிகளில் கவனம் தேவை. சிலருக்கு சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் காணப்பட்டிருந்த அந்நியோன்ய குறைபாடு பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அற்புதமும், ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளின் படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை, தொழில் தடை நீங்கும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும்.


Click it and Unblock the Notifications
