Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு அடுத்தடுத்து முன்னேற்றம்.. சொந்த வீடு கட்டும் யோகம்
Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும்.
அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு நல்ல காரியங்கள், நல்ல விஷயங்கள் ஏராளமாக நடக்கும். பாக்கியத்தில் இருக்கும் கிரகங்கள், பஞ்சமத்தில், விரயத்தில் இருக்கும் கிரகங்கள் சுப விரயங்களைக் கொடுக்கும். வீடு வாங்கி கிரகப்பிரவேஷம் செய்வது, வீடு கட்டுவதற்குத் திட்டமிடுவது, வண்டி மாற்றுவது, புதிய வண்டி வாங்குவது, பணத்தை டெப்பாசிட் செய்வது, முதலீடு செய்வது போன்ற நல்ல அமைப்பு உள்ளது.
முன்னேற்றம்
லாபத்தில் இருக்கும் சூரியன் பலம் குறைந்து இருப்பதால் நண்பர்கள், பெரியவர்கள், சித்தப்பாக்கள், மேலதிகாரிகள் மூலமாக சில பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக விரதம் இருப்பீர்கள். தெய்வத்தின் அனுக்கிரகம், தரிசனம் கிடைக்கும்.
பிரச்சனை தீரும்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு விஷயத்தில் இருந்து வந்த இழுபறியான நிலைமைகள் படிப்படியாகத் தீரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் தீரும்.
வழிபாடு
பிள்ளைகள் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். பலவிதமாக இருந்து வந்த சங்கடமான நிலைமைகள் நீங்கும். பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிக்கல்கள் தீரும். நிறைய நன்மைகள் நடக்கும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். மஹாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம், அன்னதானம் செய்வது நன்மையைத் தரும்.


Click it and Unblock the Notifications
