Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம்
Weekly Rasi Palan: ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியினர் குடும்பத்தில் துணையின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. பெரும் செல்வாக்கும், அனுகூலமும் காணப்படும். எலும்புகள் தொடர்பான பாதிப்புகள், சளி தொந்தரவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். குருவின் பார்வை இருப்பதால் சகலவிதமான அனுகூலங்களும் காணப்படும்.
கவனம்
வண்டி, வாகனங்களில் சாகசம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரமும், தொழில் அமைப்பிலும் யோகம் ஏற்படும். சமுதாயத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும்.
சிக்கல் தீரும்
பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சிறு பாதிப்புகள் கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வரும் 2 மாதங்களுக்கு சிறிய சிறிய சஞ்சலங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சூரியன் புதன் மாற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயத்தில், வாகனம், புதிய அறிமுகத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அற்புத யோகம்
3 ஆம் இடம் பலம் பெறுவதால் இந்த வாரம் அற்புதமாக இருக்கும். பெரிய பெரிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். புதிய காண்டிராக்ட்களில் கையெழுத்து போடுவீர்கள். இளைய சகோதரன், சகோதரிகளுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடைபெறும் காலகட்டம். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எல்லா காரியங்களும் தெய்வத்தின் அருளுடன் மிக எளிமையாக நடக்கும்.
வழிபாடு
வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். 7 ஆம் இடத்தில் சூரியன் இருப்பதால் கண், வயிறு உபாதைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பண வரவு தாரளமாக இருக்கும். நல்ல மாற்றங்களை கண்டிப்பாக பார்ப்பீர்கள். பெரும் சந்தோஷத்தை பெறக்கூடிய காலகட்டம். சுபச்செலவுகள் உண்டாகும். திடீர் பயணங்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்வீர்கள். உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications