வார ராசி பலன்: சிம்மம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள் என்ன?
Weekly Rasi Palan: ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை சிம்மம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்கான பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எடுத்த காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். பதவிகளும், பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். உங்களுடைய வார்த்தைகளே உங்களுக்கு வழிகாட்டும். அறச் செயல்பாடுகளால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். அரசு உளியர்களின் பொதுமக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகும் சூழல் ஏற்படும்.

தனியார் துறையில் வேலை செய்பவர்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்ல பலன்களைத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களுடைய பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதற்கான நேரமாக இருக்கும். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஆதாயங்களால் சுபச் செலவுகளை செய்து மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்கள் தங்களுடைய சேமிப்புகளை சுப செலவுகளுக்காகப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்.
ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். சமுதாயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். பெண்களுக்கு புதிய வாகனம் வாங்கும் யோக பலன்கள் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வார்கள். தந்தை, மகனுடைய உறவு சீராக இருக்கும். சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் வரும்.
வெள்ளிக்கிழமை தோறும் குலதெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். பச்சரிசி சாதம், வெல்லம், எள், நல்லெண்ணெய் கலந்து காக்கைக்கு வைப்பது நன்மை பயக்கும்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் உண்டு. திருமணவானவர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும். வழக்கு, கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அதில் ஆதாயமும் உங்களுக்கு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பணி வாய்ப்புகள் உண்டாகும். சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்கள் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பீர்கள். அதன் மூலம் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பணிபுரியும் பெண்களுக்கு சக ஊழியர்கள் சில பிரச்சனைகள் வந்து போகும். உங்களுடைய வார்த்தைகள் எடுபடாது. மன தைரியத்துடன் பணியாற்றுவது நல்லது. படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த காலமாக இருக்கும். கடின உழைப்பால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் சாதனை புரிவீர்கள்.
செவ்வாய்க்கிழமை நாட்களில் அம்மன் கோயில்களுக்குச் சென்று சுவாமியை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களுடைய பிள்ளைகள் தவறான பழக்க வழக்கத்தால் சிரமப்படும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மற்றவர்களால் சில குறுக்கீடுகள், மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அரசு வருமானத் துறை சார்ந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களுக்கு சக அதிகரிகளின் நெருக்கடிகள், இடமாற்றம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் செய்பவர்களுக்கு சிறிது சுணக்கமான காலமாக இருக்கும்.
பெண்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாழ்க்கை துணையுடன் வீண் வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பணியிடமாற்றம் உண்டாகும். பெற்றோருக்கு உதவி செய்வது நல்ல பலன்களைத் தரும். படிக்கும் மாணவர்களுக்கு நல்ல பெயரும் புகழும் மதிப்பெண்களும் பெறுவார்கள். பொருளாதார வசதிகள் கூடும். ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது அதிர்ஷ்டமான பலன்களை அள்ளித் தரும்.












Click it and Unblock the Notifications