கும்பம், மகரம், மீனம் ராசிக்கு வேலை, தொழிலில் மாற்றம்.. பண மழை கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

Weekly rasi palan: மார்ச் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சிவன் வழிபாடு அனுகூலத்தை தரும். இந்திராசி கவசம் கேட்பது மனதில் தெளிவுகளைத் தரும். இந்த வாரத்தில் எல்லா விஷயத்திலும் ஏற்றத்தைப் பெறுவீர்கள். யோசனை, குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. அஷ்டமலட்சுமி கடாட்சம் உண்டாகும். துணைவியின் நீண்டநாள் கனவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் உண்டாகும்.

Weekly rasi palan Astrology

படிப்புத் தடை, உத்தியோகத் தடை, தொழில் தடை, வியாபார தடை, முதலீடு பாதிப்புகள் போன்றவை பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். யோகமும், அனுகூலமும் ஒன்று சேரக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்களில் பரிபூரண நிவர்த்தி ஏற்படும்.

தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படுத்தக்கூடிய அமைப்பு ஏற்படும். எடுத்த காரியங்களில் அனுகூலம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் செய்யலாம். தெய்வீக அம்சம் நிறைந்த நல்ல வாரமாக இருக்கும். அரசு துறை, அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய ஏற்றத்தை தரும். உத்திரவாதத்துடன் எடுக்கக்கூடிய முடிவுகள் முன்னேற்றத்தை தரும். பிள்ளைகளுடைய நீண்டநாள் கனவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும். கலைத் துறை, மீடியா துறையினர் கெளரவத்தைப் பெறுவார்கள்.

கும்பம்: துர்கை வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு தொழில் ரீதியாக முன்னேற்றத்தையும், படிப்பு ரீதியாக அனுகூலத்தையும் தரும். எடுக்கும் முடிவுகள் ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும். இழுபறியாக இருந்த நிலைகள் மாறும். தேக ஆரோக்கியத்தில் கும்ப ராசிக்காரர்கள் காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவில் கவனம். தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும். வார்த்தைகளில் தேன் தடவிய வார்த்தையைப் பயன்படுத்துவது நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

நிதானமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தாருடன் தொலைதூர பயணம் மேற்கொள்ளும்போது தேங்காய் உடைத்து, குலதெய்வத்தை வழிபடுவது நல்லது. இழுபறியாக இருந்த நிலை மாறும். தான் உண்டு வேலை உண்டு இருப்பது நல்லது. உத்தியோகம், வேலை, தொழிலில் நல்ல மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பெண் தெய்வ வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம். நரம்பு, கண் பிரச்சனையில் கவனம் தேவை. உடற்பயிற்சி செய்வது நல்லது. சூரியன் ஆதிக்கத்தில் இருப்பதால் சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் விலகி இருப்பது நல்லது. கணவன், மனைவி பேச்சை கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு, உங்கள் குடும்பத்தில் பிறர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.

சுப காரியத்தில் இருந்த சிக்கல் தீரும். திருமணத் தடை நீங்கும். பூர்வீகத்தில் இருந்த சொத்துப் பிரச்சனை தீரும். லாபம் ஏற்படும். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு அதிக யோகம், நன்மையையும் பெற்றுத் தரும் அமைப்பு உண்டாகும். அடிமைத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். திடீர் குபேர சம்பத்து உண்டாகும். நியாபக மறதி இருப்பதால் எல்லாவற்றையும் எழுதி வைத்து பணிகளை ஆரம்பிப்பது நல்லது. பொருள்கள் களவு போவதற்கு, தொலைவதற்கு வாய்ப்பு உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+