துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு தொழிலில் வெற்றி.. இந்த விஷயத்தில் கண்டிப்பா கவனம்
Weekly rasi palan: மார்ச் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் நரசிம்மரை வழிபடுவது நன்மைகளைத் தரும். வயிறு, கால், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். பதவி, புகழ் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் யோகம் உண்டாகும். தொழிலில் அனுகூலம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்றவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். வீட்டை புதுப்பிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

தாய் வழி, தந்தை வழி உறவில் அனுகூலம் ஏற்படும். புதிய அறிமுகத்தில் நம்பிக்கை ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு படிப்படியாக கூடும். உத்திரவாதத்துடன் எடுக்கக் கூடிய முடிவுகள் பலராலும் பாராட்டப்படும். அரசுத் துறை, அரசியலில் இருப்பவர்கள் மிகப்பெரிய ஏற்றத்தைப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். செல்வாக்குகள் ஏற்படும்.
நீண்ட நாட்களாக இருந்த சிக்கல் படிப்படியாகக் குறையும். தொழில், உத்தியோகம், வழக்கு போன்ற பிரச்சனைகள் சாதகமாக உங்களுக்கு மாறும். செட்டில்மெண்ட் கிடைக்கும். எல்லா விதத்திலும் நம்பிக்கை கிடைக்கும். தெய்வ வழிபாட்டுக்காக தொலை தூரம் செல்வீர்கள். மகான்கள் ஆசிர்வாதம் ஏற்படும்.
பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் அந்நியோன்யம் பெருகும். உத்தியோகம், படிப்பில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கோளார் பதிகம் கேட்பது நல்ல பலன்களைத் தரும். யார் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம், குழப்பம் இல்லாமல் எடுத்த காரியங்களைச் செய்யலாம்
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் முருகனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். தேக ஆரோக்கியத்தில் மன அழுத்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, கழிவு சார்ந்த பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. அவர்களுடைய பழக்கவழக்கத்தில் கவனம் தேவை. சுபகாரியத் தடைகள் நீங்கும்.
தைரியம், நம்பிக்கை ஏற்படும். சுப காரியத்துக்காக புது கடன் பெறக்கூடிய பிராப்தம் உண்டாகும். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, இடித்துக் கட்டுவது போன்ற விஷயங்கள் மகிழ்ச்சியைத் தரும். ஏதாவதொரு சுப விரையாம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மன அழுத்தம் படிப்படியாக குறையும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 பாடலை படிப்பது நல்ல பலன்களைத் தரும். வாகனங்களில் அதிக மாற்றம் உண்டாகும். பெரிய அளவு ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அஷ்டலட்சுமி கடாட்சம், தொழிலில் ஏற்றம், அனுகூலம், நீண்ட நாட்களாக இருந்து தடைகள் தவிடுபொடியாகும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் குருவாயூர் கிருஷ்ணரை நினைத்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். கால், முதுகு, மூட்டு வலியில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் அனுகூலத்தை தரும். ரத்த பந்த உறவுகளில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். இழுபறியான பிரச்சனைகள் படிப்படியாக தீரும். தொழில் ரீதியாக முன்னேற்றம் காணப்படும்.
தொழில் மாற்றம் உண்டாகும். தாய் வழி, தந்தை வழி உறவில் வெள்ளை கொடி காட்டுவது நல்லது. உடற்பயிற்சியை கடைப்பிடிப்பது நல்லது. கேதுவின் சாரம் தொழில் ரீதியாக முடிவுகளை தவறாக எடுக்க வைக்கும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. எடுத்தால் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல அனுகூலம், ஏற்றத்தை தரும். உத்திரவாதத்துடன் எடுத்த காரியங்களில் ஜெயத்தை ஏற்படுத்தும். தொழில் ரீதியாக பெரிய சந்தோஷம், லட்சியங்கள் நடக்கும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களுக்கு திட்டமிடுவது, பணத்தை சேமிப்பது, அதற்கான பொருளை வாங்குவது என பரபரப்பாக இருப்பீர்கள். பயணத்திற்கு தேவையான பொருள்களை நியாபமாக எடுத்துக் கொள்வது நல்லது.
-
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications