யோசிக்க முடியாத விபரீத யோகம்! கொட்டும் பணம்! குருவால் தனுசு ராசிக்கு நடக்க போகும் 8 விஷயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக தனுசு ராசிக்கு என்ன நடக்கும் என்று பார்க்கலாம். முக்கியமான 8 விஷயங்கள் அவர்களின் வாழ்க்கையில் நடக்க போகிறது.

குரு பொதுவாக சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது. அந்த வகையில் உங்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்களை இந்த குரு பகவானின் வக்ர பெயர்ச்சி ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும்.

guru peyarchi palan 2024 guru peyarchi krodhi tamil new year 2024

குருவின் ஒவ்வொரு பயணமும் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் தனுசு ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள்.

சிலருக்கு குரு வக்ர பெயர்ச்சி வாழ்க்கையின் போக்கையே கூட மாற்றம். குருவின் பெயர்ச்சியால் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள்.. அப்படியே வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் குரு இருக்கும் இடம்.. பார்க்கும் இடம்.. நகரும் இடத்தை பொறுத்தது. குரு ஒருவரை மேலே தூக்கி வைக்கும்.. சிலரை கீழே இறக்கியும் வைக்கும்.

குரு பெயர்ச்சி மற்றும் அதன் வக்ர பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகாரர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி.

தனுசு ராசிக்கு நடக்க போகும் 7 விஷயங்கள்:

1.அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம். எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம்.

2. படிப்பில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும்.வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும். திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் .

3. இதன் காரணமாக அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாக யோசித்து பேசுங்கள் . இத்தனை காலம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. உடல் ஆரோக்கியம் சிக்கலாக இருக்கும்.

4. வேலையில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார்.

5. இத்தனை காலம் மணவாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

6. முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்ததும் வேலை, பிஸ்னஸ் விஷயங்களில் அப்படியே கைகூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.

7. உங்களுக்கு வேலையில் கடுமையான கஷ்டங்கள் நிலவி வந்தது. உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது.

8. பொறுமையாக இருப்பதே உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் காக்கும். கஷ்டங்களின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், எந்த காரியமும் நடக்காமல் போகாது.

பரிகாரம்: சென்னை திருவான்மியூர் ஆறுபடை முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+