தனுசு, மகரத்துக்கு நவம்பர் மாதத்தில் நடக்கும் அற்புத மாற்றம்.. பண வரவு உண்டா?

Subscribe to Oneindia Tamil

நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான மாதத்தின் முதல் பாதி தனுசு மற்றும் மகர ராசியினருக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றமானது 12 ராாசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், தனுசு, மகரம் ராசியினருக்கு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கிடைக்கும் பலன் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

what-kind-of-benefits-dhanusu-and-magaram-rasi-people-will-get-during-this-november-month

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு லாபம், சந்தோஷம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தங்கம், வைரம், வெள்ளி நகைகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக செய்யாமல் இருந்த தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். மனதில் சாந்தமும், சந்தோஷமும் ஏற்படும்.

பதவி உயர்வு

உறவினர்கள் வருகை, நண்பர்கள் வருகை ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிடித்த ஹோட்டலுக்கு சென்ற சாப்பிட்டு மகிழ்வீர்கள். சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் யோகம் ஏற்படும். வீடு கட்டுவது, வீடு மாற்றுவது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்றவற்றை செய்வீர்கள். தொழில் விஷயத்தில்
பதவி உயர்வுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வழிபாடு

நேர்காணல்களில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழுத்துப் பகுதி, முதுகுத் தண்டுவடம், கால் பகுதியில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஹார்மோன் பிரச்சனைகளில் கவனம் தேவை. உடற்பயிற்சி செய்யவில்லை எனில் தேவையில்லாத பாதிப்புகளுக்குள்ளாக நேரிடும். நரசிம்மர் வழிபாடு சகலவிதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தும். தினந்தோறும் 20 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது சிறந்த பரிகாரமாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில் ரீதியாக அனுகூலம், வியாபாரம் ரீதியாக ஏற்றம் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். தொழிலில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். தனியாக தொழில் தொடங்குவீர்கள்.

யோக பலன்

குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியத் தடைகள் நீங்கும். வீடு, நிலம், நகைகள், ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது.

வழிபாடு

குருவின் அதிசாரம் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும், ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+