கூமாபட்டி போல விருச்சிகத்துக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ஒரே பாட்டுல ஓஹோன்னு மாறப்போகுது வாழ்க்கை
மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குரு, சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதனும், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவானும் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்குள் வருகிறார்.
அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2 ஆம் அதிபதியான குரு பகவான் 8 ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்துக்குச் செல்கிறார். வெளிநாட்டில் இருந்து பணம் வந்து சேரும். மறைந்திருக்கக் கூடிய சில விஷயங்கள், காப்பீடு, பங்குச் சந்தை, லாட்டரி மூலமாக பணம் வருவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கொட்டக்கூடிய மாதமாக இருக்கும்.
பாக்கியம்
சுக்கிர பகவான் ஆட்சி பலத்தோடு வலிமையாக இருப்பதால் வெளிநாட்டில் வேலை, வெளிநாட்டில் இருந்து பணம் வரும் வாய்ப்புள்ளது. வீட்டுக்குத் தேவையான செலவுகளைச் செய்வது, வீட்டை புனரமைப்பது, வீட்டை புதுப்பிப்பது போன்றவற்றை செய்வீர்கள். வியாபாரம், விற்பனை சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்த மாதத்தில் அற்புதமாக இருக்கும். புதன் 7 ஆம் பார்வையாக 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பயணம், விற்பனை, திட்டமிடுதல் நன்றாக இருக்கும். வியாபாரம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
லாபம் கொட்டும்
புத்திசாலித்தனத்தால், அறிவால் வியாபாரத்தில் லாபம் காணும் வாய்ப்புண்டு. ரியல் எஸ்டேட்டில் சரியாகப் பேசி விற்பனை செய்வீர்கள். மார்க்கெட்டிங், பேச்சால் தொழில் செய்யும் அத்தனை துறைகளுக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீடு, அப்பார்ட்மென்ட், வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கு அற்புதமான வாய்ப்பு ஏற்படும். ராகு 4 ஆம் இடத்தில் இருப்பதால் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது. தாயின் உடல்நிலை, தாயின் உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
வேலைவாய்ப்பு
10 ஆம் அதிபதி 8 இல் அமர்ந்திருப்பதால் ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் 9 ஆம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்துக்கு வந்து அமர்கிறார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் நிச்சயமாக வேலை கிடைக்கும். திடீர் பதவி உயர்வு, திடீர் இடமாற்றம், அரசு ரீதியான ஒப்பந்தங்கள் கிடைக்கும். செவ்வாய் வலிமையாக இருப்பதால் சீருடை தொடர்பான துறையில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பு கொடுக்கக்கூடிய நல்ல மாதமாக இந்த ஜூலை மாதம் இருக்கும். தொழில், வேலை, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
வெளிநாடு யோகம்
8 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வெளிநாட்டு யோகம் நிச்சயமாக உண்டு. பிஆர் அப்ளை செய்து காத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு குட் நியூஸ் வந்து சேரும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். கடல் கடந்து செல்லும் யோகம் உண்டு. அது தொடர்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சுக்கிரன் 7 இல் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம், புரிதல் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் நன்றாக இருக்கும். நீங்கள் சந்திக்கும் நபர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
காதல்
காதல் சார்ந்த விஷயங்களில் நாட்டம் உண்டாகும். காதல் அமைப்பு சிறப்பு பெறும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். தொட்டது துலங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். திடீர் வாய்ப்புகள் தேடி வரும். 5க்கு உரியவன் 8 ஆம் இடத்தில் மறைந்திருப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவது நிச்சயமாக உங்கள் எண்ணங்கள், செயல்கள் அனைத்திலும் நற்பலன்களைக் காண்பீர்கள்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications