Dhanusu: தனுசு ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்
Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு பாக்கிய ஸ்தானம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. தொலைதூரப் பயணம், இன்பச் சுற்றுலா சென்று வரும் யோகம் உண்டாகும். சனி வக்கிரமாக அமர்ந்திருப்பதால் சொந்த பந்தங்கள் தொடர்பான பிரச்சனை, அம்மா வீடு பிரச்சனை, நிலப் பிரச்சனை, பத்திரப் பிரச்சனை நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். எதிர்பாராத நட்புகள், நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
கஷ்டம் தீரும்
பாசிட்டிவான சூழ்நிலை ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிஎப், கிராஜுவிட்டி வந்து சேரும். நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை, செலவுகளை செய்து கொடுப்பீர்கள். பிள்ளைகளுடைய கஷ்டங்களை எல்லாம் தீர்த்துக் கொடுப்பீர்கள்.
அனுகூலம்
பிள்ளைகளின் உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் அனுகூலங்களும், முன்னேற்றமும் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அற்புதமான காலகட்டமாக இருக்கும். உறவினர்களிடம் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. விநாயகர், பெருமாள் வழிபாடு நல்ல பண வரவையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
யோக பலன்
உடற்பயிற்சியை மறக்காமல் செய்ய வேண்டும். ரத்த பந்த உறவுகள், உறவினர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கும் அமைப்பு உள்ளது. வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து செல்வார்கள். எல்லா விஷயத்திலும் ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு ரீதியாக ஏற்றத்தைப் பெறுவீர்கள்.
வழிபாடு
தலைவலி, முதுகுவலி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. அடிவயிறு, கழிவுப் பாதையில் உள்ள பிரச்சனைகள் நிவர்த்தியாகும். சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீத நன்மைகள் கிடைக்கும். பத்மநாபர் வழிபாடு சகலவித முன்னேற்றங்களையும் தரும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications
