கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு எப்படி இருக்கும்?.. ஆகஸ்ட் மாதத்தில் வரும் அதிர்ஷ்டம், சவால்கள்

Subscribe to Oneindia Tamil

August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

what-kind-of-benefits-will-get-kadagam-simmam-kanni-rasi-people-during-this-august-month

கடகம் ராசி பலன்

கடக ராசியினருக்கு சூரிய பகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் பண வரவு அற்புதமாக இருக்கும். கடந்த இரண்டரை வருடங்களாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். இந்த மாதத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டமாக இருக்கும். பெண்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். தொழில் ஆரம்பிப்பது, புதிய முதலீடுகளை செய்வது என நீங்கள் எந்த காரியங்களை எடுத்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

ராசியில் குரு பகவான் இருப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருப்பதால் வீட்டில் நிறைய சுப நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். கிரகப்பிரவேஷம், திருமண யோகம், வளைகாப்பு என அடுத்தடுத்து மங்களகிரகமான நிகழ்ச்சிகள் நடக்கும். சூரிய பகவான் ஆட்சி பெற்றிருப்பதோடு புதன் பகவானும் இணைந்து புதாதித்ய யோகம் உண்டாகியுள்ளது.

உங்களுக்கு தாய்மாமனின் ஆதரவு கிடைக்கும். பாதகாதிபதியான சுக்கிரன் கன்னியில் நீச்சமாகியிருக்கிறார். அதனால் இனி அனைத்து வித தடைகளும் தவிடு பொடியாகும். இந்த மாதம் முழுவதும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சூரியனார் கோவில் செல்வது, சூரிய பகவானை வழிபாடு செய்வது ஏற்றததைத் தரும். கோதுமை, தானியங்களை புறாக்களுக்கு போடுவது நன்மை பயக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசியினர் கடந்த காலகட்டங்களில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். அந்த நிலைமைகள் மாறும். பெண்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்றுள்ளதால் நீங்கள் பிரகாசமடைவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். உயர்ந்த எண்ணங்கள் ஏற்படும். மீடியா துறைக்கு முயற்சி செய்யும் பெண்களுக்கு அதற்கான யோகம் உண்டாகும்.

சிறப்பான பதவிகள் கிடைக்கும். சுக்கிர பகவான் நீச்சமடைந்துள்ளார். 3, 10க்கு உடையவர் நீச்சமாவதால் அலுவலகத்தில் கலகம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வேலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கெட்ட பெயர் வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் வேலை இழப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால் மிகுந்த கவனம் தேவை.

வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்வோருக்கு இந்த மாதம் நடக்காது, அடுத்த மாதம் கண்டிப்பாக நடக்கும். குடும்பத்தில் சண்டை, வாக்குவாதம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் மற்றவர்களுக்காக நீங்கள் பேசினால் உங்கள் வேலையை இழக்கும் வாய்ப்பு ஏற்படும். 4க்கு உரிய செவ்வாய் பகவான் 11 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். துணை, துணையின் குடும்பத்தினருடன் பிரச்சனை ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு நினைத்ததை செய்து முடிக்கும் திட சித்தம் அதிகமாக இருக்கும். இந்த ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் மீண்டும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சட்ட சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். மன மகிழ்ச்சி, மன அமைதி, மன நிம்மதி ஏற்படும்.

இதுவரை உங்கள் மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சனைகள் சரியாகும். உங்களைப் பற்றிய அவதூறுகள் பரிபூரணமாக நீங்கும். அலுவலகத்தில், குடும்பத்தில் உங்களைப் பற்றிய எண்ணங்கள் மாறும். 3, 8க்கு உடைய செவ்வாய் பகவான் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலைகள் கண்டிப்பாக கிடைக்கும். ராணுவம், போலீஸ், தளபதி, உடல், உடற்கூறு சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

ஜிம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றம் ஏற்படும். செவ்வாய் 10 இல் இருப்பதால் சட்டம் சம்பந்தப்பட்டு பேசிக் கொண்டிருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகளால் உங்களுக்கே பிரச்சனை ஏற்படும். 11 இல் குரு பகவான் இருக்கிறார். குரு உச்சமாக இருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். லாபங்கள் அபரிமிதமானதாக இருப்பதால் ஏற்றம் ஏற்படும். எதைத் தொட்டாலும் வெற்றி என்கிற நிலைமை ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+