கும்ப ராசிக்கு சொந்த வீடு கட்டும் யோகம்.. 3 கிரகங்களால் வரும் பிரகாசமான மாற்றம்
Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக அற்புதமான முன்னேற்றம் காணப்படும். 70 வயது வரை இருக்கும் கும்ப ராசியினருக்கு சகலவித முன்னேற்றங்கள் காணப்படும். நிறைய நன்மைகள் உண்டாகும் காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தேவையில்லாத நண்பர்களிடம் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது.
நல்ல செய்தி
எந்த நல்ல விஷயங்களில் என்னவித முடிவுகளை எடுப்பதானாலும் அதனை சிவன் வழிபாடு செய்த பின்பு எடுப்பது நன்மையைத் தரும். முதுகு, காது, மூக்கு, தொண்டை, தலை, முகம் சார்ந்த பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரும் செல்வாக்கு ஏற்படும். சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
பண வரவு
குழப்பம் அதிகரிமாக இருக்கும். சந்திரன் சேரும்போது தேவையில்லாத வாக்குவாதம், பிதற்றிக் கொண்டே இருப்பது போன்ற நிலைமைகள் இந்த வார இறுதியில் இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் புதன் இருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நடக்கப்போகும் விஷயத்தை முன்பே கணிப்பீர்கள். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் தீரும்.
வீடு கட்டும் யோகம்
குரு சூரியன் தொடக்கூடிய நிலைமை இருப்பதால் கடன், நோய், பிரச்சனைகளைத் தீர்க்கும். உங்களுடைய நேரம் நன்றாக இருக்கும். எந்த விஷயங்களை எடுத்தாலும் ஏற்றம் பெறும் யோகம் உண்டாகும். வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும். அம்மாவின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் நல்ல காலகட்டம்.
வழிபாடு
வண்டி வாகனங்களில் நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் கைகூடும். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழம்பிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு உங்களுக்கு சகலவித முன்னேற்றங்களைத் தரும்.


Click it and Unblock the Notifications
