குரு, சூரியனால் மகர ராசிக்கு பண மழை கொட்டும் யோகம்.. 3 குட்நியூஸ் காத்திருக்கு
Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். உச்சம் பெற்ற குருவை சூரியன் தொடுவதால் அரசு சார்ந்த, அப்பா சார்ந்த விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். மகன்களுக்கு குழந்தை பிறக்கும். திருமண யோகம் உண்டாகும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கழுத்து, கை பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.
பிரச்சனை தீரும்
நிலம், வீடு, ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். எல்லா விஷயங்களிலும் தடைபட்டிருந்தாலும் இந்த காலகட்டத்தில் சரியாக நடக்க ஆரம்பிக்கும். தைரியமாக பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெரிய ஆற்றலும், தன்னம்பிக்கையும் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். இதயம் சம்பந்தமான பாதிப்புகளில் கவனம் தேவை.
கவனம்
கணவன், மனைவி இருவரும் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. காதல் அமைப்பில் நண்பர்கள், உறவினர்களால் தேவையில்லாத பிரச்சனை உண்டாக்குவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
பணவரவு
தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்றிருப்பது நல்லது. தனிப்பட்ட விஷயங்கள், ரகசியங்களை வெளியில் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. சுப காரியங்களுக்கு எந்தவிதமான குறைவும் இருக்காது. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். ஆண்கள் பெண்கள் விஷயத்திலும், பெண்கள் ஆண்கள் விஷயத்திலும் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
யோகம்
லாபத்தின் அளவு அபரிமிதமானதாக இருக்கும். இயற்கையாக இருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் நிவர்த்தியாகும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய நல்ல காலகட்டம். குடும்பத்தை தவிர வெளியிடம், உத்தியோகம், வியாபாரத்தில் கொடுத்த வாக்குகளை காப்பாற்றும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. நினைத்த காரியங்கள் நடக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும். மகா கணபதி, நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
