மீனம்: பண மழை கொட்டப் போகுது.. ஜூலை 27 - ஆகஸ்ட் 2 வார ராசி பலன்
Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசியினருக்கு உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்திலும் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
நன்மை
உத்தியோகம், தொழில் ரீதியாக எதிர்பார்த்த அனைத்து விதமான நன்மைகளும் நடக்கும். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். கோளார் பதிகத்தை சொல்லி வருவது ராகு கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். பண வரவு நன்றாக இருக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். ஜென்மசனி வக்கிரத்தில் இருப்பதால் உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நன்மை பயக்கும்.
முன்னேற்றம்
இதுவரை போட்டிருந்த உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். திருமண யோகம், குழந்தை பாக்கியம், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்ரடும். அரசிடமிருந்து வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். அரசு ஆர்டர்கள், சீ்ட்டுக் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம், பேரக் குழந்தை பிறப்பது போன்ற அமைப்பு உள்ளது.
வெளிநாடு யோகம்
பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, சொத்துகள் சேர்ப்பது போன்ற யோகம் உண்டாகும். பலவித பிரச்சனைகள் நிவர்த்தியாகும். வயிறு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. முருகரின் சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது தடைகளை தவிடு பொடியாக்கும். அபிராமி அந்தாதியைப் படிப்பது சகலவித நன்மைகளையும் ஏற்படுத்தும்.
வழிபாடு
நிறைய விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும் காலம். கோபத்தை தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். முருகனை மனதார வழிபாடு செய்வது நன்மை பயக்கும். கந்த சஷ்டி கவசம் படிப்பது ஏற்றத்தைத் தரும். சுப்பிரமணிய புஜங்கம் சகலவித நன்மைகளையும் தரும். பெரிய பெரிய விஷயங்கள், நன்மைகள் நடக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நடக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
