துலாமிற்கு ரெண்டு லட்டு தின்ன ஆசையா.. அள்ளி கொடுக்கும் சனி.. வீடு, பணம், தொழில் அதிர்ஷ்டம் கொட்டும்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் தற்போது மீன மனையில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியா் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 4, 5க்கு அதிபதி. தற்போது 6 ஆம் இடம் எனும் கடன், நோய், பகை, எதிர்ப்பு எனும் இடத்தில் வக்கிர நிலையில் அமர்ந்திருக்கிறார். வக்கிர நிலை என்பது இயல்புக்கு மீறிய தன்மை. இதுவரை எதை எல்லாம் தடை செய்து கொண்டிருந்தாரோ அந்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். சுகம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
வீடு வாங்கும் யோகம்
வீடு வாங்க முடியவில்லை என்று தவித்தவர்களுக்கு கடனை வாங்கி வீடு வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். கிடப்பில் போடப்பட்டிருந்த விஷயங்கள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வங்கியில் உடனடியாக கடன் கிடைக்கும். வாகனம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாகன உதிரிபாகங்கள், வாகன தொழில், விவசாம் போன்ற தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
அரசு வேலை
5 என்பது குழந்தைகள். குழந்தைகளின் வேலை விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். படித்து முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். வாழ்க்கையில் செட்டிலாகும் யோகம் கிடைக்கும். அரசுத் தேர்வு எழுதி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்கும். பட்டம், பதவி கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
கவனம்
6 ஆம் இடத்தில் சனி பகவான் வக்கிரமாக அமர்ந்திருப்பதால் வேலை விஷயங்களில் நன்மை கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அந்த வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சனி வக்கிரமாவதால் ஆரோக்கியம் மேம்படும். நோய் சார்ந்த விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வம்பு, வழக்கு, போட்டி, பொறாமை சார்ந்த விஷயங்களில் செல்லாமல் இருப்பது நல்லது. 8 என்பது வலி, துக்கத்தை கொடுக்கக்கூடியது என்பதால் நெகட்டிவான விஷயங்களை செய்யாமல் இருப்பது நல்லது.
திடீர் அதிர்ஷ்டம்
6 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்தை தனக்கு 3 ஆம் இடத்தை சனி பார்க்கிறார். திடீர் அதிர்ஷ்டம், அமானுஸ்ய சக்தி, நிறைய விஷயங்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 6 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் 12 ஆம் இடத்தைப் பார்க்கிறார். கடனை அடைத்து விடும் தன்னம்பிக்கை உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
வெளிநாடு யோகம்
12 ஆம் இடம் என்பது தூக்கம். இனி நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள். பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வெளிநாடு சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். வெளிநாடு வாணிபம் தொடர்பான விஷயங்கள் சிறப்பு பெறும். வீடு, வண்டி வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். குருவின் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது கடன், வெளிநாடு, ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தடை நிவர்த்தியாகி நல்ல நேரம் உங்களுக்கு ஆரம்பித்துவிட்டது. அற்புதமான காலகட்டமாக வரும் 138 நாட்கள் கட்டாயம் அமையும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications