தங்க தட்டில்.. அமரும் காலம்! கடக ராசிக்கு அதிர்ஷ்டம்.. 2024ன் கடைசி 3 மாதங்கள் எப்படி இருக்கும்?
சென்னை: கடக ராசிக்கு அடுத்த 3 மாதங்கள் எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்.. 2024ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் இது. அக்டோபர்.. நவம்பர்.. டிசம்பர் என்று 2024 வருடம் முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ளன. இந்த 3 மாதங்கள் கடக ராசிக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
அக்டோபர் மாதம்: அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் கடக ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.

உங்களுக்கு நிறைய பண வரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும்.
நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும். ஆனால் இந்த குரு பெயர்ச்சி காரணமாக சில கெட்ட விஷயங்களும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம்.
யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம். நீங்கள் அதீதமாக வேலையில் ஈடுபடுபவர். நீங்கள் உறுதியானவர் மற்றும் சாதனைகளை கொண்டவர். பகல் கனவு காண வேண்டாம்.. செயல்களில் இறங்குங்கள் வெற்றி நிச்சயம். நீங்கள் ஓய்வு எடுப்பதை விரும்ப மாட்டீர்கள். பல ஊர்களுக்கு சென்று மக்களை பார்க்க விரும்புவீர்கள். காதல் மன்னன்.
நவம்பர் மாதம்: நவம்பர் மாதம் உங்கள் ராசிக்கு, நீங்கள் இனி செய்வதில் எல்லாம் கொஞ்சம் இடர்பாடுகள் வரும். எதாவது ஒரு விஷயத்தை செய்ய நினைத்தால் அது தடங்கலாக மாறும். பைக்கை ஸ்டார்ட் செய்ய நினைத்தால் கூட பேட்டரி போய் நிற்குமே.. அப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தடங்கல்கள் வரும்.
தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும்: இப்படி தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும் என்றாலும்.. எந்த காரியமும் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும். ஆனால் கண்டிப்பாக நடக்கும். எதுவும் நடக்காமல் போகாது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
குழந்தை பேறுக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வர வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வர வாய்ப்பு உண்டு. நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள்.
டிசம்பர் மாதம்: நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.
சுப செலவு இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த விதமான முதலீடுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செல்வாக மாற்றுங்கள்.












Click it and Unblock the Notifications