புனர்பூச நட்சத்திரத்தில் செவ்வாய்.. வீடு நிலம் வாங்கும் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் எவை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

செவ்வாய்: செவ்வாய் பகவான் புனர்பூச நட்சத்திரம் இரண்டாம் பாதத்திற்கு நகரவுள்ளதால் 3 ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றன. செவ்வாய் பகவானால் சொத்துகள் வாங்கும் யோகம் பெறும் 3 ராசிகள் எவை என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்..

செவ்வாய் பகவான் ஆற்றல், வீரம், தைரியம், வேகத்துக்கு காரணமானவராக இருக்கிறார். ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு ஒரு செயலைச் செய்வதற்கான தைரியமும், ஆற்றலும் கைகூடி வரும். தற்போது வக்ர நிலையில் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கக்கூடிய செவ்வாய் பகவான் ஜனவரி 22ம் தேதி கடகத்தில் உள்ள குருவின் நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்தில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

lucky zodiac

ஜனவரி 22 ஆம் தேதி கடகத்தில் உள்ள புனர்பூச நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து, மிதுனத்தில் உள்ள புனர்பூச நட்சத்திரம் இரண்டாம் பாதத்திற்கு செவ்வாய் பகவான் பின்னோக்கி நகரவுள்ளார். இந்த நகர்வினால் செவ்வாய் 3 ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு அபரிமிதமான நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் வழங்கவுள்ளார்.

செவ்வாயின் வக்கிரப் பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு வீடு, மனை சொத்துகள் வாங்கும் யோகத்தை தரும். அதிர்ஷ்டத்தையும், நற்பலன்களையும் தரும் என்று இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி: மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி காரணமாக பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றன. இதன் மூலம் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். அதிக அளவிலான லாபம் கிடைக்கும். நிதி நிலை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். புதிய வருமான வாய்ப்புகள் ஏற்படும். வீடு, மனை தொடர்பான சொத்துகள் வாங்கும் யோகங்கள் உண்டு. முதலீடு தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பெரிய பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும்.
பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள், உங்கள் வீடு, மனை சொத்து தொடர்பான முதலீடு விஷயங்களில் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். வணிக வர்க்கத்தினருக்குப் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்ப உறவு, காதல் வாழ்க்கையில் இணக்கமான சூழல், நேர்மறையான விளைவுகள் நடக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி: சிம்ம ராசிக்கு செவ்வாய் பகவான் விரய ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இதனால், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் அமையும். தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் வரும்.

வாகனம், வீடு, மனை போன்ற சொத்து வாங்கும் உங்களுடைய முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அதன் மூலம் ஆதாயமும் அடைவீர்கள். உங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாயின் பெயர்ச்சி காரணமாக உங்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். சொந்த வீடு மனை வாங்குவதற்கான யோகம் உண்டு. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் திட்டத்தில் வெற்றி கிடைக்கும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுவீர்கள். உங்களுடைய முடிவெடுக்கும் திறனால் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும்.

வியாபாரம், தொழிலை விரிவுபடுத்துவதற்கான யோகங்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்வதற்கான யோகங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி, தேர்வுகளில் வெற்றிகள் கிட்டும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+