புரட்டாசியில் என்ன நடக்குதோ இல்லையோ! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்! குறிச்சு வச்சுக்கோங்க
சென்னை: புரட்டாசி மாதத்தில் 4 ராசிகளுக்கு பெரிய அளவில் அதிர்ஷ்டம் அடிக்கும். அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். தமிழ் மாதங்களில் புனிதமான மாதமாக கருதப்படும், பலரும் விரதம் இருக்கும் மாதமான புரட்டாசி மாதம் ஜோதிட ரீதியாக.. ஏன் அறிவியல் ரீதியான அற்புதங்களை, மகிமைகளை கொண்ட மாதம் ஆகும்.
இந்த புரட்டாசி மாதத்தில் பின்வரும் 4 ராசிகளுக்கு பெரிய அளவில் அதிர்ஷ்டம் அடிக்கும். அவர்கள் நினைத்தது பல இடங்களில் நடக்கும். அந்த 4 ராசிகள் எவையெவை.. எந்ததெந்த விஷயங்களில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

மேஷ ராசி: இந்த மாதம் உங்களுக்கு பொருள் மாதம் என்று கூட சொல்லலாம். இந்த மாதத்தில் புதிய நிலம், வீடு வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிக அளவில் பொருட்கள் வாங்கலாம். சிலர் சம்பிரதாயம் கருதி இந்த மாதம் பொருட்களை வாங்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் வெறுமனே புக் செய்து வைக்க கூட வாய்ப்புகள் உள்ளன. அந்த அளவிற்கு இந்த மாதம் உங்களுக்கு கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு கெடுக்கும் வருடங்களாக இருந்தது.. இப்போது கொடுக்கும் வருடமாக மாறி உள்ளது. தேவையற்ற சண்டைக்கு போக வேண்டாம்.
கன்னி ராசி: கன்னி ராசிக்கு இது வேலை மாதம். புதிய பிஸ்னஸ் தொடங்க இந்த மாதம் நிதி கிடைக்கும் . பிஸ்னஸ் தொடங்குவதற்கான பணிகளை இந்த மாதமே முடிக்கலாம். அதோடு இல்லாமல்.. வேறு பக்கத்தில் இருந்தும் பணம் வரும். இதுவரை இருந்த கடனை கொஞ்சம் அடைத்து இருப்பீர்கள். இந்த மாதம் மீதம் உள்ள கடனையும் அடைத்துவிடுவீர்கள். உடலில் நிலவிய பிரச்சனைகளுக்கு இந்த மாதத்தோடு முற்றுப்புள்ளி வைக்கலாம். இத்தனை காலம் ஆடு மாதிரி திரிந்தவர்கள் இனி கோட் மாதிரி கெத்து வாழ்க்கை வாழ போகிறீர்கள். தூக்கத்தில் கவனம் செலுத்துங்கள்.. வயிற்று விஷயத்தில் உஷார்.
விருச்சிக ராசி: விருச்சிகத்திற்கு இது விஸ்வரூபம் எடுக்க போகும் மாதம். வீடு வேண்டுமா வீடு இருக்கு.. நிலம் வேண்டுமா நிலம் இருக்கு.. கார் வேண்டுமா கார் இருக்கு.. இன்ப சுற்றுலா போக வேண்டுமா.. அட அதுவும் இருக்குங்க. இத்தனை காலம் உடல் உபாதைகள், சர்க்கரை வியாதி, கால் வலி என்று பாதித்து வீட்டில் இருந்திருப்பீர்கள். இனி அது எல்லாம் இல்லை. 18 வயது பட்டாம்பூச்சியாக இனி சுற்றும் அளவிற்கு ஆரோக்கியதோடு இருப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் நல்ல விஷயங்கள் நடக்கும் மாதமாக இருக்கும். அதிகம் பேச வேண்டாம்.. அளவாக பேசுங்கள்.
மீன ராசி: மீன ராசி நேயர்கள்.... நீங்கள் படாத பாடெல்லாம் பட்டுவிட்டீர்கள். கணவர் பிரிந்துவிட்டார் .,. மனைவி பிரிந்துவிட்டார்.. மகனை பள்ளி அனுப்ப முடியவில்லை.. வீட்டில் பிரச்சனை.. கடன் பிரச்சனை என்றெல்லாம் இருந்தீர்கள். அது எல்லாம் இந்த மாதம் மொத்தமாக முடியாது என்றாலும் மூச்சு விடும் அளவிற்கு.. கொஞ்சம் ஆசுவாசம் அடையும் அளவிற்கு நல்ல சூழல் ஏற்படும். ஆம்.. இதுவரை நிலவிய மோசமான நிலைமை போய் கொஞ்சம் நிம்மதியான நாட்கள் தொடங்கும். நல்லது நடக்கும் முன்.. கெட்டது எல்லாம் முடியுமே.. அப்படி ஒரு காலம் இது.
-
ஆனி மாதத்தில் மிதுன ராசிக்கு ராஜயோகம்.. தொழில், பணவரவில் அதிரடி முன்னேற்றம்! -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications