Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க ஜாதகத்தில் இந்த கிரகங்கள் கூட்டணி இருக்கா ஆஸ்துமா வராமல் எச்சரிக்கையா இருங்க - பரிகாரங்கள்

ஆஸ்துமாவிற்கும் புதனுக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீங்களா? புதன் புத்தி நாயகன், ஜாதகத்தில் புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கு ஆஸ்துமா எளிதில் தாக்குமாம். மே மாதம் முதல் செவ்வாய்கிழமை சர்வதேச ஆஸ்தும

Subscribe to Oneindia Tamil

மதுரை: உலக ஆஸ்துமா தினமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. நேற்று உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கு ஆஸ்துமா கண்டிப்பாக இருக்கும் என்று ஜோதிட ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் என்னும் கொள்ளை நோய் பற்றிய பயத்தில் மக்கள் இருக்கும் போது புற்றுநோய், எய்ட்ஸ், ஆஸ்துமா, காசநோய் என பல நோய்கள் எல்லாம் சாதாரணமாகத்தான் தெரியும். எந்த நோய் என்றாலும் கவனிக்காமல் விட்டால் சாதாரண காய்ச்சல் கூட உயிரை காவு வாங்கி விடும் என்பதுதான் உண்மை.

கால புருஷ லக்னாதிபதியான செவ்வாயும் ஆத்ம காரகன் மற்றும் கால புருஷ லக்னத்தில் உச்சமடையும் சூரியனும் புதன் சனியோடு தொடர்பு கொள்ள ஆஸ்துமா வரும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சந்திரன்தான் சளி இருமல் கோழைகட்டு போன்ற நீரினால் ஏற்படும் வியாதிகளுக்கு காரக கிரகமாகும். சளியினால் மூக்கில் நீர்வடிதல் என்பதுதான் ஆஸ்துமாவின் ஆரம்ப அறிகுறியாகும். இதனை ஏற்படுத்தும் கிரக அமைப்பு சனி சந்திர சேர்க்கையாகும்.
புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கெல்லாம் ஆஸ்துமா அல்லது சுவாச கோளாறுகள் கட்டாயம் இருக்கும் புதன்,ராகுவின் மூச்சுக்கோளாருகளை ஏற்படுத்தும்.

கால புருஷராசியின் இரண்டாமிடமான ரிஷபம், மற்றும் மூன்றாமிடமான மிதுனமும் மூக்கு, சுவாசம் ஆகியவற்றை குறிக்கும் பாவங்களாகும் எனவே மூச்சு மற்றும் சுவாசத்தை குறிக்கும் பாவங்கள் 2 மற்றும் 3 வீடுகள் அகும். ஆஸ்துமா சுவாச நோய் என்பதால் காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ராசிகளுக்கும் அதன் அதிபதிகளுக்கும் பங்குள்ளது.

ஆஸ்துமா யாருக்கு வரும்

ஆஸ்துமா யாருக்கு வரும்

கால புருஷனுக்கு நான்காம் வீடான கடகம் நுரையீரலையும் சிம்மம் அதன் அடிப்பாகத்தையும் குறிக்கும். எனவே கால புருஷனுக்கு 4, 5 வீடுகளிலோ அல்லது ஜெனன ஜாதக 4, 5 வீடுகளோ சனியின் தொடர்பு பெற்றிருந்து அதனோடு சனியின் அசுப தொடர்புகள் ஆஸ்துமா வியாதியை ஏற்படுத்திவிடும்.
செவ்வாய் சனியோடு சேர்ந்து ஆறு எட்டு 12ஆம் வீடுகளில் நின்று அந்த வீடுகள் காற்று ராசியாகவோ அல்லது நீர் ராசியாகவோ அமைந்தால் மூச்சுகோளாறு மற்றும் ஆஸ்துமா நோய் ஏற்படும். சனி நான்காம் வீட்டோடு தொடர்பு கொண்டு அந்த நான்காம் வீடு நீர் ராசி அல்லது காற்று ராசியானால் ஆஸ்துமா நோய் ஏற்படும்.

ஆஸ்துமா நிச்சயம் வரும்

ஆஸ்துமா நிச்சயம் வரும்

சூரியன் கடகம் ராசியில் நின்று சனியின் பார்வை சேர்கை பெற்றால் ஆஸ்துமா விடாது துரத்தும். லக்னம் நீர் ராசி அல்லது காற்று ராசியாக அமைந்து லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு செவ்வாய் அல்லது சூரியனின் அசுப தொடர்பு பெற்று சனி சேர்க்கை பெற்றால் ஆஸ்துமா நோய் தாக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீன ராசிகளும் காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆறாம் வீடுகளாக அமைய பெற்றவர்களுக்கு ஆஸ்துமா சனி, புதன், சந்திரன் தசா புத்தி அந்தரங்களில் அழையாத விருந்தாளியாக ஆஸ்துமா அல்லது சுவாச நோய்கள் வந்துவிடும்

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

நான்காம் வீடு மற்றும் ஆறாம் வீட்டதிபதிகள் பரிவர்த்தனை பெற்று அதில் ஒரு வீடு காற்று அல்லது நீர் ராசியானால் ஆஸ்துமா நோய் ஏற்படும். காலபுருஷ நான்காம் வீட்டதிபதியான சந்திரனும் ஆறாம் வீட்டதிபதியான புதனும் பரிவர்தனை பெற்று சனி தொடர்பும் பெற்றுவிட்டால் தீவிர ஆஸ்துமா நோய் அல்லது மூச்சுதிணறல் நோய் ஏற்படும்.

தீவிர ஆஸ்துமா பிரச்சினை

தீவிர ஆஸ்துமா பிரச்சினை

சுக்கிரன் ஒருவருக்கு ஆறு, எட்டு 12ஆம் அதிபதிகளாகவோ அல்லது கடகம், கன்னி,விருச்சிகம்,மீனம் ராசிகளில் நின்றுவிட்டாலோ அவரோடு சந்திரன் சேர்கை பெரும்போதெல்லாம் நீரினால் ஏற்படும் சளி தொந்தரவுகள் தாக்கும். புதன் சேர்க்கை பெரும்போதெல்லாம் ஆஸ்துமாவும் சனி பார்வை அல்லது சேர்க்கை பெரும்போதெல்லாம் தீவிர ஆஸ்துமாவும் வந்துவிடுகிறது.

ஜில் உணவுகள் வேண்டாம்

ஜில் உணவுகள் வேண்டாம்

காலபுருஷனுக்கு இரண்டாம் வீடான ரிஷபத்தை ஆஸ்துமாவிற்க்கான பாவமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்சத்துமிக்க உணவுகள் ஆகியவற்றை தவிர்த்தாலே போதும் ஆஸ்துமாவிலிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம். அதிக குளிர்ச்சி தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும். தயிர், குளிர்பானம், குளிர்ந்த நீர் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஃப்ர்ட்ஜ்ஜில் வைத்து குளிர்ந்த உணவுகளை சாப்பிடகூடாது. வெளி இடங்களில் அதிகமாக உணவு குடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

என்னென்ன பரிகாரம்

என்னென்ன பரிகாரம்

சளி பிடிப்பதும் சனி பிடிப்பதும் ஒன்று" என சளிநோயால் அவதியுருபவர்கள் கூறுவார்கள். எனவே சுவாசத்தை குறிக்கும் வாயு கிரகமான சனி பகவானை வழிபட்டாலே ஆஸ்துமா மற்றும் சுவாசநோயிலிருந்து தப்பலாம். தினசரி சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சிகள் செய்வதும் சிறந்த பலனளிக்கும்.
செவ்வாய் பரிகார ஸ்தலங்களான வைதீஸ்வரன் கோயில், ஆஸ்துமா நோயிற்கான சிறந்த பரிகார ஸ்தலமாகும். புதன் ஸ்தலமான திருவெண்காடு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களுக்கு சென்று புதபகவானை புதன் கிழமைகளில் வழிபடுவது சுவாச கோளாறுகளை நீக்கும். வாயு ஸ்தலம் மற்றும் ராகு பரிகார ஸ்தலமான ஸ்ரீ காளஹஸ்தி சென்று புதன் நட்சத்திரங்களான ஆயில்யம்-கேட்டை-ரேவதி நட்சத்திரங்களில் வழிபடுவது மற்றும் பரிகாரங்கள் செய்வது சிறந்த பலனளிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+