For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவு பாதுகாப்பு நாள் : உடலுக்கு சூடு தரும் காரமான உணவுகளை இந்த ராசிக்காரர்கள் சாப்பிடாதீர்கள்

உலக பாதுகாப்பு தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு வளமாக வாழ்வதே உணவு பாதுகாப்பு நாள் கடைப்பிடிப்பதன் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உலக சுகாதார அமைப்பு இணைந்து உணவு பாதுகாப்பின் அவசியத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 7ம் தேதி உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவித்தது. உலக பாதுகாப்பு தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்னும் அன்னதோஷம் ஏற்பட்டால் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

இன்றைய உலகில் உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே விஷமாகி வருகிறது. உணவு பழக்கவழக்க மாற்றத்தால் சமச்சீர் கெட்டு நோய்த் தாக்குதலும் அதிகரித்து விட்டது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சத்தான ஆரோக்கியமான உணவுகளை பாதுகாப்பாக சமைத்து உண்டால் நமக்கு நோய் தொற்று ஏற்படாது நோய்கள் பாதித்தாலும் எளிதில் குணமாகி விடும்.

100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை செயல்படுத்துவோம்: அமைச்சர் சேகர்பாபு 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை செயல்படுத்துவோம்: அமைச்சர் சேகர்பாபு

சிறு தானியங்களையும் நவதானியங்களையும் மறந்த நாம் துரித உணவுகளுக்கு அடிமையானதால் புதிய புதிய நோய் தாக்குதலுக்கு மனிதர்கள் ஆளாகின்றனர். உணவின் அருமையை உணர்த்தவும் உலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் உணவு கிடைக்கவும்தான் அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை ஐப்பசி மாதத்தில் அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

உலக உணவு பாதுகாப்பு தினம்

உலக உணவு பாதுகாப்பு தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உலக சுகாதார அமைப்பு இணைந்து உணவு பாதுகாப்பின் அவசியத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 7ம் தேதி உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என கடந்த 2018ஆம் ஆண்டு அறிவித்தது. அதன் படி இன்று உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "பாதுகாப்பான உணவை இன்று எடுத்துக்கொண்டால் நாளை ஆரோக்கியமாக வாழலாம்" என்ற கருப்பொருளுடன் கடைபிடிக்கப்படுகிறது.

சந்திரனும் உணவும்

சந்திரனும் உணவும்

ஜோதிடத்தில் அன்னம் எனப்படும் உணவிற்கான காரக கிரகம் சந்திரன். அன்னை எனப்படும் மாத்ருகாரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணியான பார்வதியை வணங்கும் காரக கிரகமும் சந்திரன்தான். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் மனைவி ஸ்ரீ மகாலட்சுமி கூட சந்திர சகோதரிதான் காரணம் இருவரும் பாற்கடலில் இருந்து வந்தவர்தான். அன்பு போன்ற உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகமும் சந்திரனேதான். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்கள் உணவை வீணாக்கமாட்டார்கள். சமைத்த உணவை நன்றாக ருசித்து ரசித்து சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவு

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவு

நமக்கும் நம்முடைய குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்களுக்கும் உணவு மற்றும் சிற்றுண்டிகளைத் தயாரிக்கும்போது, ​​உணவு விஷமாவதை தடுக்க எளிய உணவு பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவது முக்கியம். தற்போது நாடு முழுவதும் கொரொனா தொற்று நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நாளில் நாம் நோயிலிருந்து நம்மையும், நம்மை நம்பி உணவுகளை உட்கொள்பவர்களையும் பாதுகாக்க நல்ல ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்புச் சத்து அதிகம் கொண்ட உணவு வகைகளை உட்கொள்வது அவசியமாகிறது.

சுகாதாரமான உணவு

சுகாதாரமான உணவு

பொதுவாகச் சமைக்க துவங்கும் முன் குறைந்தது 20 நொடிகள் உங்கள் கைகளை கழுவுவது மிக முக்கியம்.

நன்றாக கைகளைக் கழுவுங்கள். இதன் மூலம் மட்டுமே ஏராளமான நோய்த் தொற்றிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளலாம். உங்கள் கைகள், பாத்திரங்கள் மற்றும் சமைக்கும் இடத்தையும் அடிக்கடி கழுவுங்கள்.
உணவு தயாரிப்பதற்கு முன்பும் ​​உணவு சமைத்த பிறகும் கைகளைக் கழுவுவது முக்கியம். இறைச்சி, கோழி, கடல் உணவு சமைக்காத முட்டைகளை கையாண்ட பிறகு கைகளை கழுவுவது அவசியம்.

பாதுகாப்பான உணவை சமைப்போம்

பாதுகாப்பான உணவை சமைப்போம்

நாம் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதாது. நம் சுற்றத்தாரையும் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

உணவுகளைச் சமைக்கும் போது, அதற்கென தனித்தனி பாத்திரங்களையும் பயன்படுத்த வேண்டும். காய்கறிகளையும், இறைச்சியையும் வெட்டும் போது தனித்தனி கத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.இறைச்சி மற்றும் காய்கறிகளை அளவான சூட்டில் சமைத்து முடிந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட வெப்ப அளவில் சிறிது நேரம் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

யார் எந்த உணவை தவிர்க்கலாம்

யார் எந்த உணவை தவிர்க்கலாம்

மேஷ ராசிக்காரர்கள் அதிக சர்க்கரை மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ரிஷப ராசிக்காரர்கள் அதிக மசாலா பால் சேர்த்த உணவுகளையும் தவிர்க்கவும். மிதுன ராசிக்காரர்கள் வாயு பதார்த்தங்களையும், கடக ராசிக்காரர்கள் குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நலம். சிம்மம் ராசிக்காரர்கள் கசப்பு சுவை உணவுகளையும் அதிக கொழுப்பான உணவுகளையும் தவிர்ப்பது நலம். கன்னி ராசிக்காரர்கள் மாமிச உணவுகளையும் தவிர்ப்பது நலம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

துலாம் ராசிக்காரர்களை அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் வேக வைக்காத உணவுகளைத் தவிர்க்க வேண்டும் பச்சைத்தக்காளியை தவிர்க்கவும், தனுசு ராசிக்காரர்கள் உடல் சூட்டினை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்கவும். மகர ராசிக்காரர்கள் அதிக மாமிச உணவுகளைத் தவிர்க்கவும். கும்ப ராசிக்காரர்கள் அதிக குளிர்ச்சி ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்கவும். மீன ராசிக்காரர்கள் அதிக கசப்பு உணவுகளையும் வாயு ஏற்படுத்தும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும் இதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

அன்னபூரணி வழிபாடு

அன்னபூரணி வழிபாடு

ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆவார். சுவையான உணவு வகைகளின் காரகர் சுக்கிரன் ஆவார். உணவினை குறிக்கும் போஜன ஸ்தானம் எனப்படுவது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவமாகும். உணவுப்பொருட்களைக் குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரையும் குறிக்கும் ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர பாதுகாப்பான ஆரோக்கியமான உணவு காலம் முழுவதும் கிடைக்கும்.

English summary
World Food Safety Day celebrated on 7 June 2021 aims to draw attention and inspire action to help prevent, detect and manage foodborne risks, contributing to food security, human health, economic prosperity, agriculture, market access, tourism and sustainable development.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X