2023 இயர் எண்டர் ஜோதிடம்: 2024ல் இந்த 6 ராசிக்காரர்களை தேடி வரப்போகும் அதிர்ஷ்ட தேவதை
சென்னை: 2023 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. குரு பகவான் 12 ராசிகளில் பயணம் செய்து விட்டு மீண்டும் மேஷ ராசியில் இருந்து பயணத்தை தொடங்கினார். குரு வளையம் எனப்படும் ரிஷப ராசியில் 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் பயணம் செய்யப்போகிறார். சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதை தேடி வரப்போகிறார்.
மேஷம்: ஜென்ம குரு உங்களுக்கு சோதனைகளை கொடுத்தாலும் குடும்ப குரு குதூகலத்தை தருவார். 2024ஆம் ஆண்டில் திருமண சுபகாரியம் தொடர்பாக பேசலாம், குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். பதவியில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆண்டின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். இந்த குரு பெயர்ச்சியால் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குருவின் பார்வையால் திருமணம் சுப காரியம் நடைபெறும். வீடு சொத்து வாங்கலாம். நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மிதுனம்: குருபகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் பயணம் செய்வதால் தொழில் ரீதியான லாபம் பெருகும். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும். வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். மே மாதத்திற்குப் பிறகு புதிய வேலை கிடைக்கும். வேலையை இழந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடகம்: 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் குருபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வேலையில் மாற்றம் நிகழும். வேலையில் கவனமும் நிதானமும் அவசியம். உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம் சிக்கலாகிவிடும். குரு பகவானின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வீடு நிலம் வாங்கும் யோகம் தேடி வரும். நோய்கள் நீங்கும், கடன் பிரச்சினையும் முடிவுக்கு வரும்.
சிம்மம்: குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். கடல் கடந்து செல்லும் யோகம் கைகூடி வரும். பெண்களுக்கு தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. 2024 ஆம் ஆண்டில் அதிர்ஷ்ட தேவதை உங்கள் வீடு தேடி வரப்போகிறார்.
கன்னி: அஷ்டம குரு கஷ்டங்களை நீக்கப்போகிறார். தொழில் வேலை விசயங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். வேலைக்காக செய்யும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். 2024ஆம் மே மாதத்திற்குப் பிறகு நல்ல தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். வேலையில் இருந்த பிச்சினைகள் நீங்கும் மன உளைச்சல் நீங்கி மன அமைதி அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications