12 ராசியில் இந்த ராசியினர் அறிவால் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.. உங்க ராசி இருக்கானு பாருங்க
சென்னை: அதிக அறிவுக் கூர்மையுடன் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேறும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுமே ஒருசில குறிப்பிட்ட தனித்துவமான குணநலன்களைப் பெற்றிருப்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காணும் வகையில் சில திறமைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு முன்னேறுவார்கள். ஒருவரின் வாழ்க்கை நன்றாக அமைய அவர்களுடைய நுண்ணறிவுத் திறன் அவசியமான ஒன்றாகும். எந்தெந்த ராசிக்காரர்கள் நுண்ணறிவைக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்று பார்க்கலாம்.

மிதுன ராசி: அறிவுக் கூர்மை மற்றும் திறமைக்கு அதிபதியாக விளங்க கூடியவர் புதன் பகவான். இந்த புத பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் மிதுன ராசியினர். இந்த ராசியினர் நன்கு படிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் எந்த ஒரு விஷயமானாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தனை செய்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். இந்த ஆற்றல் மூலமாக இவர்கள் சரியான முடிவுகளை எடுப்பார்கள். செயல்களைத் திட்டமிட்டு, பொறுமையாகச் செய்து வெற்றி காண்பார்கள். 12 ராசியில் புத்திசாலித்தானமாக செயல்படக் கூடிய ராசியில் முதல் ராசியாக மிதுன ராசியினர் இருப்பார்கள்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களை ஆட்சி செய்பவராக செவ்வாய் பகவான் விளங்குகிறார். இந்த ராசியினர் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் நிறைந்தவராக இருப்பார்கள். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படக்கூடிய விருச்சிக ராசியினர் இந்த ஆற்றல் மூலமாக தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பார்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகளை அடைவார்கள். தங்களுடைய பேச்சுத் திறன் மற்றும் மற்றவர்களுடன் பழகும் விதத்தால் மனதில் எளிதில் இடம்பிடிக்கும் நபர்களாக இருப்பார்கள்.
மகர ராசி: மகர ராசிக்காரர்கள் அறிவுக்கூர்மை படைத்தவர்களாக இருப்பார்கள். சனி பகவான் ஆட்சி செய்யக்கூடிய இந்த ராசியினர் சிறிய வயதில் இருந்தே குடும்பத்தையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பாளிகளான நீங்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்று வாழ்வீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், தொழில் சார்ந்த விஷயங்களில் இலக்குகளை நிர்ணயித்து அதன்படி செயல்படக் கூடிய நபர்களாக இருப்பீர்கள். அனைத்து துறைகளிலும் வெற்றி மற்றும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கும்ப ராசி: புத்திசாலித்தனத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். செய்யும் காரியங்கள் அனைத்திலும் புத்திசாலித்தனமாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் இருப்பார்கள். புதிய யோசனை, முயற்சியுடன் அனைத்து வேலைகளையும் அணுகுவார்கள். வாழ்க்கையில் வளர்ச்சி, முன்னேற்றத்தை நோக்கியே இவர்களுடைய அனைத்து செயல்களும் இருக்கும். எதையும் சிந்தித்து செயல்பட்டு வெற்றியைக் காண்பார்கள்.
-
ஆனி மாதத்தில் மிதுன ராசிக்கு ராஜயோகம்.. தொழில், பணவரவில் அதிரடி முன்னேற்றம்! -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications