விருச்சிக ராசிக்கு வீடு, நிலம், வெளிநாட்டு யோகம்.. ரிலேசன்ஷிப்பில் ரொம்ப கவனம் கவனம்
தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு 4 முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம் ராசி அல்லது விருச்சிக லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பிக்கும்போதே 5 ஆம் இடத்தில் 4 கிரகங்களின் சேர்க்கை உள்ளது. 5 ஆம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், கும்பம், அந்நியோன்யம், குழந்தை. சனி, ராகு, நீச்சம் பெற்றிருக்கும் புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் இணைந்துள்ளன. நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளது.

ஆரோக்கியத்தில் கவனம்
சனி, ராகுவின் பிடியில் உள்ளதால் விருச்சிக ராசிக்காரர்கள் குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் உறவுகள், சுய ஒழுக்கத்தில் மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத மற்றவர்களுடன் உறவில் இருப்பதை தவிர்ப்பது நல்லது. 4 ஆம் இடத்தில் ராகு வந்து அமருவதால் அம்மாவுக்கு கண்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வெளிநாட்டு யோகம்
சுக ஸ்தானத்தில் ராகு அமர்ந்தால் சுக ஸ்தானத்தை கட்டாயம் கெடுக்கும். நாம் இருக்கும் வீட்டில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். ராகுவால் கண்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதே 4 ஆம் இடத்தில் ராகு வருவதால் அசுர வளர்ச்சியை உண்டாக்கும். பெரிய வீடு, பங்களா என செட்டிலாகும் வாய்ப்பு உண்டாகும். ராகு காட்டக்கூடிய இடம் கும்பம். கும்பம் என்றால் துபாய், வெளியூர், வெளிநாடு, மலேசியா, ஜப்பான் செல்வதற்கான வாய்ப்புள்ளது.
வேலையில் வழக்கு
உற்பத்தி, தயாரிப்பு தொழிலில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 10 ஆம் இடத்தில் கேது இருப்பதால் தொழில், வேலை செய்யும் இடத்தில் வழக்கு உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. வேலையை விடுவதற்கான வாய்ப்புள்ளது. 7 ஆம் இடத்தில் இருந்து குரு பார்வை இருப்பதால் கடந்த ஒரு வருடமாக வேலையில் பிரச்சனை இல்லாமல் இருந்திருப்பீர்கள்.
பெயர் கெடும் வாய்ப்பு
குரு அஷ்டமத்தில் அமருவதால் சுப விரையங்களைக் கொடுப்பார். பேரையும் கெடுப்பார். கம்யூனிகேஷன் மூலாக பெயர் கெடுவது, பணத்தை திருப்பெக் கொடுக்க முடியாததால் பெயர் கெடும், யாரோ செய்த குற்றத்துக்கு பலி ஆடு ஆவீர்கள். இத்தனை நடந்தாலும் குரு பார்வையால் பெரிய வெற்றியைக் கொடுக்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்து ஒரே ஒரு கடனை மட்டும் வைத்திருப்பீர்கள்.
பண வரவு கொட்டும்
தூக்கமில்லாமல், நோயினால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் விடுபடுவீர்கள். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் காசு பணத்திற்கு வீட்டில் எந்தவொரு குறையும் இருக்காது. நகைகள் வாங்கக்கூடிய பிராப்தம் உண்டாகும். அப்பாவின் மூலம் பணம் வரும். முன்னோர்களின் தொழில் மூலம் நன்மை உண்டாகும். வீடு, நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு.
பரிகாரம், மதிப்பெண்
குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். மொழி ரீதியான பாட புத்தகங்கள் தானமாக கொடுப்பது நல்லது. புதன்கிழமைகளில் மதிய வேளைகளில் விரதம் இருப்பது நன்மையைத் தரும். விருச்சிக ராசியினருக்கு சந்தோஷத்தின் ரீதியில் 65 சதவீதமும், பொருளாதார ரீதியாக 80 சதவீதமும் நன்மை தரும் காலகட்டமாக இருக்கும்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications