Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி குருவின் மாற்றம்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. கன்னி - மீனம் ராசியினர் பெறும் பலன்கள்

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி மாத ராசி பலன்: பிப்ரவரி மாதத்தில் சனி குருவின் மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டங்களை பெறப் போகின்றனர். மேஷம் முதல் சிம்மம் ராசி வரை பெறப்போகும் பலன்கள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

பிப்ரவரி மாதத்தில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த மாதம் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமான சனி பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அதேசமயம் குரு பகவானும் வக்ர நிவர்த்தி அடைகிறார். பிப்ரவரி மாதத்தில் நடக்கும் குரு வக்ர நிவர்த்தி, சனி நட்சத்திர பெயர்ச்சி உள்ளிட்ட முக்கிய கிரக பெயர்ச்சிகளின் தாக்கத்தால் அனைத்து ராசிகளும் மாற்றங்களை அனுபவிப்பார்கள். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.

february month rasi palan



கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் ஏற்படும் சனி மற்றும் குருவின் மாற்றத்தால் பணத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது உங்களுடைய நேரத்தை முக்கியமான விஷயங்களுக்காக செலவிட வேண்டும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கும் நேரமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீண்டகாலமாக இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். வீட்டில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி குரு வக்ர நிவர்த்தி கலவையான பலன்களை அளிக்கும். வெற்றி அல்லது லாபத்தை அடைய நீங்கள் ஏதேனும் தவறான நடவடிக்கைகளை எடுத்தால், நீங்கள் சட்ட சிக்கலில் சிக்க நேரிடும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் குடும்பத்தினர் மற்றும் குடும்ப நண்பர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாதத்தின் இரண்டாவது வாரத்தில், உங்கள் உடல்நலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் தங்களுடைய பேச்சையும், நடந்து கொள்ளும் விதத்தையும் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் உங்களுடைய எதிரிகள் கவனித்துக் கொண்டு வருவார்கள். சிறிய தவறைக் கூட பெரியதாக்க நினைப்பார்கள் என்பதால் வேலையில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வேலை தொடர்பான முக்கிய முடிவுகளை கோபத்திலோ, உணர்ச்சிவசப்பட்டோ எடுக்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் எதிர்காலத்தில் வருத்தப்படக்கூடிய சூழல் ஏற்படும். பணம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

தனுசு: முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியினால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். தொலைதூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதனால் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அவர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதேபோல, குடும்ப உறவுகளிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில், வியாபாரம், வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை யோசித்து செய்வது நல்லது. முடிந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கும் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பெரும் நஷ்டத்தை காண்பதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். பருவகால நோய் பாதிப்புகளில் சிக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் நிகழும் முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் உங்களுடைய வீட்டிலும், அலுவலகத்திலும் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடுகளின் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சனைகளை சந்திப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும் சூழல் உருவாகும். செலவுகளைத் தவிர்த்து பணத்தை சிக்கனமாக சேமிப்பது நல்லது.

மீனம்: பிப்ரவரி மாதத்தில் நடக்கும் முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் மீன ராசிக்காரர்களுக்கு சிறிது பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வீட்டிலும், அலுவலகத்திலும் சின்ன சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக உங்களுடைய இலக்குகளை நோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த மாதத்தில் பண வரவுக்கு உங்களுக்கு குறைவிருக்காது. பொருளாதார சூழலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+