20 வருடமாக ஏங்கிய கோவை மக்கள்.. முடிவிற்கு வரும் பிரம்மாண்ட ரிங் ரோடு.. இனி வேகமாக முன்னேறும்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோயம்புத்தூர் மக்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கும் கோவை மேற்கு ரிங் ரோடு சாலை திட்டங்கள் வேகம் எடுத்து உள்ளன. ஆகஸ்ட் 2023 இல் தொடங்கப்பட்ட மேற்கு சுற்றுச் சாலை எனப்படும் மேற்கு புறவழிச்சாலையின் முதல் கட்டத்தின் 60% பணிகள் மாநில நெடுஞ்சாலைத் துறையால் முடிக்கப்பட்டுள்ளது.

இதே வேகத்தில் பணிகள் செல்லும் பட்சத்தில் செப்டம்பர் 2025க்குள் பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

coimbatore automobile

மேற்கு ரிங் ரோடு சேலம்-கொச்சி சாலையில் (SHU 52) தொடங்கி, நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் சாலையில் (NH67) நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடிவடைகிறது. நான்கு வழிச்சாலையின் மொத்த நீளம் 32.43 கி.மீ ஆகும்.

மொத்தமாக மூன்று கட்டங்களாக இந்த சாலை அமைக்கப்படும். முதற்கட்டமாக 11.80 கி.மீ. இந்த சாலை மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி வழியாக செல்லும். இந்த முதல் கட்ட பணிகள் அடுத்த வருடம் முடிக்கப்பட உள்ளது.

எப்போது முடிவடையும்: இதன் இரண்டாம் 2ம் கட்ட நீளம் 12.10 கி.மீ தூரத்திற்கு அமைய உள்ளது. பேரூர், மேற்கு சித்திரை சாவடி, கல்லிக்கநாயக்கன் பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம் வழியாக இந்த சாலை செல்லும். 3ம் கட்டத்தின் நீளம் 8.52 கி.மீ., பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம் வழியாக இந்த சாலை செல்லும்.

நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் கூடலூர் இடையே அமைக்கப்பட உள்ள 4 வழிச்சாலையில் இருபுறமும் 9 மீட்டர் கேரேஜ்வே மற்றும் 4 மீட்டர் அகலத்தில் செடிகள் கொண்ட மீடியன் அமைக்கப்படும்.

இதற்காக மதுக்கரை அருகே தமிழக வனத்துறையின் நிலத்தில் பல மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறையின் மூத்த அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், கட்டம் 1ல் சுமார் 60% முடித்துள்ளோம். நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்டமாக, 60% பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள LA பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையும். சமீபத்தில் வாகன ஓட்டி ஒருவர் குழியில் விழுந்து இறந்ததை அடுத்து, நாங்கள் தடுப்புகளை அமைத்துள்ளோம், என்று தெரிவித்து உள்ளனர்.

பணிகள் வேகம்: முதற்கட்டமாக ₹200 கோடியில் நடைபாதை உடன் கூடிய சாலை அமைக்கப்படும். மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பணிகள் மந்தமடைந்துள்ளன. அது சரி செய்யப்பட்டு, பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது. இது மாதம்பட்டியில் இருந்து கணுவாய் வரை கிட்டத்தட்ட 10 கி.மீ. அரசு நிதி ஒதுக்கீடு செய்ய குறைந்தபட்சம் 90% முடிக்க வேண்டும்.

இறுதிக்கட்டப் பணிக்காக, நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன, இந்த திட்டம் முடிவடைந்த பின், திட்டத்தின் முழு நோக்கமும் மாறுவதுடன், பொதுமக்களின் பார்வையும் மாறுகிறது. மேற்கு புறவழிச்சாலை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இப்போது முடிவிற்கு வர உள்ளது.

இன்னொரு சாலை: மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு சார்பாக கோவையில் உள்ள முக்கியமான எல் அண்ட் டி சாலை அகலப்படுத்தப்பட உள்ளது.

குறுகலான எல் அண்ட் டி பைபாஸ் சாலையை நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை (27.2 கிமீ) ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு (MoRTH) தமிழ்நாடு அரசு திட்டத்தை அனுப்பியுள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை விரிவுபடுத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+