கார் வாங்க போறீங்களா? முதலில் பார்க்கிங்கை ரெடி பண்ணுங்க.. சென்னை மாநகராட்சி முக்கிய திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கார் வாங்குகிறீர்களா? முதலில் பார்க்கிங் இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். ஆம் கார், பைக் வாங்கும் முன் உங்கள் வீட்டில் பார்க் செய்ய வசதி இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

சென்னை மாநகராட்சியின் CUMTA நகரம் முழுவதும் பார்க்கிங் கொள்கையை மாற்ற உள்ளது. சென்னையில் நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது. அதன்படி பார்க்கிங் செய்ய சென்னை முழுக்க கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளனர்.

automobile chennai parking

லாட்டரி அடிப்படையிலான குடியிருப்பு பார்க்கிங் முறை கொண்டு வரப்பட உள்ளது. மற்ற இடங்களில் பார்க் செய்ய கட்டணம் கொண்டு வரும் முறை வர உள்ளது. தனியார் கட்டிடங்களில் உள்ள பார்க்கிங் பயன்படுத்த கட்டணம் விதிக்கப்பட உள்ளது. அதேபோல் இவி வாகனங்களுக்காக ஆஃப்-ஸ்ட்ரீட் லாட்களில் 20% EV சார்ஜிங் வசதியுடன் கூடிய பார்க்கிங்கில் அமைக்கப்பட உள்ளன. இதற்காக சென்னை முழுக்க பல இடங்களில் பார்க்கிங்குகள் அமைக்கப்பட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தி நகர் பார்க்கிங்

தி நகர் பகுதியில் போக்குவரத்தை குறைக்க வரி, கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே அங்கே உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கான.. MLCP பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கே மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டணம் வெறும் 20 ரூபாய்தான். ஆனால் அதை மக்கள் பயன்படுத்தாமல் சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர்.

கார் பார்க்கிங் கட்டணம்: இது போக சென்னையில் சாலை ஓரங்களில் பார்க் செய்யப்படும் வாகனங்களை கண்காணிக்க எக்ஸ் ஃபோர்ஸ் படைகளை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் தவறான நிர்வாகம் என்ற பல புகார்களுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி தற்போது தமிழ்நாடு முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் "எக்ஸ் போர்ஸ்" படையை களமிறக்கி உள்ளது.

சென்னையில் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட தெரு பார்க்கிங் வசதிகளை நிர்வகிக்கும் வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகளை களமிறக்கி உள்ளது. இப்போது பார்க்கிங்கின் நிர்வாகத்தை சிவில் அமைப்பே நேரடியாகக் கையாண்டு வருகிறது. இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 மற்றும் காருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் இதில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுவதால் முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் படையை தமிழ்நாடு அரசு இங்கே களமிறக்கி உள்ளது.

பார்க்கிங் மாற்றம்: சென்னையில் பல இடங்களில் சாலைகளில் வாகனங்களை பார்க் செய்யும் வழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் எந்த இடத்தில் யார் பார்க் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த புதிய பிரச்னையை தீர்க்க புது பார்க்கிங் விதிமுறைகளை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது.

அதன்படி முதல் கட்டமாக சென்னை அண்ணா நகரில் வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் பல இடங்களில் படிப்படியாக இதன் மூலம் பார்க்கிங் விதிகள் மாற்றப்பட உள்ளன.

சென்னையில் வாகன பார்க்கிங் தொடர்பாக கொள்கைகளை வகுக்கும்படியும், எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப பார்க்கும் செய்யும் முறையை தடுக்கவும் விதிகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் தமிழ்நாடு அரசு இது தொடர்பாக உறுதி அளித்துள்ளது.

சென்னையில் மக்கள் விதிமுறைகள் இல்லாமல் ஆங்காங்கே பார்க் செய்வதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இறுதிக் கொள்கை மூன்று மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கிறார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பேசுகையில், சாலைகளில் வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இறுதிக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து நிறுவனம் (சியுஎம்டிஏ) மோட்டார் வாகன பார்க்கிங் கொள்கை வரைவு கொண்டு வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துகளைப் பெற்று மூன்று மாதங்களுக்குள் அது இறுதி செய்யப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அண்ணா நகர்; இந்த நிலையில்தான் சென்னை அண்ணா நகரில் வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் பல இடங்களில் படிப்படியாக இதன் மூலம் பார்க்கிங் விதிகள் மாற்றப்பட உள்ளன.

அறிக்கை: கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் CUMTA-வின் வரைவுக் கொள்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதில் சில பரிந்துரைகள் இணைக்கப்பட்டதாகவும் தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜே. சத்தியநாராயண பிரசாத் ஆகியோரின் முதல் டிவிஷன் பெஞ்ச் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைவு கொள்கை கொள்கையாக முழுமையாக 3 மாதங்களில் மாற்றப்பட உள்ளது.

இந்த வரைவுக் கொள்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல், வீடு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களுக்கு அவர்களின் கருத்துக்களுக்காக அனுப்பப்பட்டது. அந்தத் துறைகளின் கருத்துகளைப் பெற்ற பிறகு, கொள்கை இறுதி செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், வாகனங்களை எங்கே எல்லாம் பார்க் செய்யலாம் எங்கே எல்லாம் பார்க் செய்ய கூடாது தவறான இடங்களில் பார்க் செய்தால் என்ன நடவடிக்கை, என்ன அபராதம், ஒரு இடத்தை பார்க்கிங் இடமாக மாற்ற எப்படி அனுமதி பெறுவது என்பது உள்ளிட்ட விதிகள் வகுக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+