கிரவுண்டுக்கு வெளியே இபி போர்ட் சிக்ஸர்! தமிழ்நாடு முழுக்க மாறுது சாலைகள்! புதிய வசதி என்ன தெரியுமா?
சென்னை:ஹூண்டாய் நிறுவனம் சென்னையின் முதல் 180 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தை ஸ்பென்சர் பிளாசா மாலில் நிறுவி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 100 வேகமான பொது சார்ஜர்கள் அமைக்கும் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த சார்ஜர் அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இ வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜிங் போர்டுகளை அதிகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன. உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாயிண்ட் இயங்கும்.
வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதிகரிக்கப்படும்: முக்கியமாக தமிழ்நாட்டில் இ வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜிங் போர்டுகளை அதிகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன.
டெல்லி 21
குஜராத் 53
ஹரியானா 2
கர்நாடகா 10
கேரளா 30
மகாராஷ்டிரா 13
மேகாலயா 1
தமிழ்நாட்டில் 13 பாஸ்ட் சார்ஜர்கள் உள்ளன. இதை 100க்கும் அதிகமாக உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம். தமிழ்நாட்டில் பாஸ்ட் சார்ஜர்கள் அவசியம் அதிகம் ஆகி உள்ளதால், அரசு சார்பாக இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திட்டம்: இதை மனதில் வைத்தே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ) கடந்த சில நாட்களுக்கு முன் மின்சார வாகனங்களுக்கு (இ-வாகனங்கள்) மாறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. சென்னை மத்திய விநியோக வட்டம் மயிலாப்பூரில், டி. நகர், எழும்பூர், அண்ணாசாலை ஆகிய இடங்களில் அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் ஆடியோ காட்சிகள் ரோட் ஷோ நடைபெற்றது.
முறையான திட்டமிடலுடன் நடைபெற்ற 'கோ எலக்ட்ரிக் பிரசாரம்’ நிறைவு விழாவில் மின்வாரிய அதிகாரிகள், இ-வாகனங்களைப் பயன்படுத்துவதால் மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் வாங்கும் செலவையும் மிச்சப்படுத்துவது குறித்து விரிவாக மக்களுக்கு விளக்கினர்.
இ வாகனங்கள்: இது போக இ வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக, பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகன மாசுவை குறைக்கும் முயற்சியில், நகரங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை மின்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக தங்க நாற்கர சாலையில் 6,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார வாகனத்தை இயக்கும் வகையில் நெடுஞ்சாலைகளை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இ-மொபைலிட்டி மற்றும் இ-பஸ்களின் பயணத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications